டிடிவிக்கு அல்வா கொடுத்த புதுவை எம்எல்ஏக்கள்... எடப்பாடி அணியில் இணைந்தனர்!!

Asianet News Tamil  
Published : Aug 16, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
டிடிவிக்கு அல்வா கொடுத்த புதுவை எம்எல்ஏக்கள்... எடப்பாடி அணியில் இணைந்தனர்!!

சுருக்கம்

ttv support mla joined with edappadi team

புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர், திடீரென, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுக, ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ். அணியில் 11 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் உள்ளனர்.

டிடிவி தினகரன் அணியில் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்ற எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது அதிமுக அணி இணைப்பு விரைவில் நடைபெறும் என்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிகளைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன், அசனா ஆகியோர் இதுநாள் வரை சசிகலா அணியில் இருந்து வந்தனர். 

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது, புதுவை அருகே, எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து, 

அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதுச்சேரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பும் அளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!
No அண்ணாமலை..! பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 27 தொகுதிகளுக்குமான பட்டியல் வெளியானது..