
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த பணியில் இருக்கக்கூடிய உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமித்தனர் எனவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி மரமடைந்தார்.
இதையடுத்து அதிமுக சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. ஜெ மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பன்னீர்செல்வம் மக்களிடையே ஆதரவு கோரினார்.
இதனால் மக்கள் மத்தியில் ஒபிஎஸ் பயங்கர வரவேற்பை பெற்றார். இதைகட்டிகாத்து தற்போது எடப்பாடி விசாரனை கமிஷன் அமைக்க கோரும் அளவுக்கு கொண்டுவந்துள்ளார் ஒபிஎஸ்.
இதனிடையே ஒபிஎஸ்சுடன் சேர்ந்து ஸ்டாலினும் சிபிஐ விசாரணை கமிஷன் வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
ஜெ வின் மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் டிடிவி தினகரன் பகிரங்கமாக மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் டிடிவியும் விசாரணை கமிஷன் வேண்டும் என கோரினார்.
இந்நிலையில், தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த பணியில் இருக்கக்கூடிய உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமித்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்..