
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு என்று அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து டிடிவி அணிக்கு பிரிந்து சென்ற கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் எம்.எல்.ஏ நேற்று மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பினார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 ஆக குறைந்தது.
இதனிடையே எடப்பாடி அணிக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வருவதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி எம்.எல்.ஏ.க்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.
135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு என்று டிடிவி தெரிவித்தார். 135 எம்.எல்.ஏ.க்களில் 21 எம்.எல்.ஏ.க்கள் போனால் எத்தனை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.