4வது சுற்றிலும் சுயேட்சை வேட்பாளர் நாகராஜ சோழன் ( டிடிவி தினகரன் ) முன்னிலையில் இருக்கிறார்...!

First Published Dec 24, 2017, 11:47 AM IST
Highlights
ttv dinakaran leading 4th in RK Nagar By Poll


ஆ.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 4 வது சுற்றுகள் முடிவில் 11, 816 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது. 

சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர். 

இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர். 

இதைதொடர்ந்து சின்னமோ கட்சியோ முக்கியமல்ல எனவும் தேர்தல் யார் நிற்கிறார்கள், மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பதே முக்கியம் எனவும் டிடிவி தினகரன் சூளுரைத்தார். 

இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்றின் முடிவில் 11,816 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன்  முன்னிலையில் உள்ளார். 

அதாவது டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9672 வாக்குதள் பெற்றுள்ளார்.

டிடிவி தினகரன் அமைதிப்படை படத்தில் வரும் சத்தியராஜ் போல சிறிது சிறிதாக முன்னிலை வகித்து வருகிறார். 

ஆர்.கே.நகர் வெற்றி டிடிவி தினகரனுக்கு தான் என்பதையே இந்த முடிவுகள் பிரதிபலிக்கிறது. வெற்றியில் மட்டும் டிடிவி தினகரன் அமைதிப்படை சத்தியராஜ் போல் இருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு உதவுவதில் அவரை போல் இருக்க கூடாது எனவும் ஆர்.கே.நகர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

click me!