அதிமுக ஆட்சி இப்போது ஆம்புலன்சில் போய்ட்டிருக்கு !! தேர்தல் முடிஞ்சதும் காலியாகி விடும்…. எடப்பாடி பழனிசாமி அரசை கிழித்து தொங்கவிட்ட தினகரன்…

By Selvanayagam PFirst Published Feb 27, 2019, 7:39 AM IST
Highlights

தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக  ஆட்சி  தற்போது ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கிறது என்றும் . இது, வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த சில நாட்களாக மக்கள் சந்திப்பு பயணம் என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்.  கடந்த வாரம் விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அவர் செல்லுட் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இது ஆளும் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தினகரன் கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார்.

கடலுார் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட தினகரன் விருத்தாசலம் கடைவீதியில் பேசினார். அப்போது தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க., ஆட்சி ஆம்புலன்சில் சென்றுகொண்டிருக்கிறது. இது, நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிந்துவிடும் என கிண்டல் செய்தார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க விருத்தாசலத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.அனைத்து தகுதிகளும் கொண்ட விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என அவ் வலியுறுத்தினார்.

மண்டல ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த வேளாண் கல்லுாரி துவங்க வேண்டும். விருத்தாசலத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் ஆகியவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்ற தினகரன், உங்கள் ஆதரவுடன் அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவை நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார்.

அதிமுகவின் ஊழல் குறித்து பேசிய பாமகவுடன் அதிமுக, கூட்டணி வைத்துள்ளது. இது ஜெயலலிதாவுட்ககு  விரோதமான கூட்டணி என குற்றம் சாட்டினார். தினகரனின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கில் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளது பொது மக்களுக்க ஆச்சர்யத்தையும், அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!