திகாரையே பார்த்தவங்க நாங்க, இதுக்கெல்லாம் அஞ்சுவோமா?: ரெய்டு ரவுசை அடித்து நொறுக்கிய டிடிவி...

 
Published : Nov 09, 2017, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
திகாரையே பார்த்தவங்க நாங்க, இதுக்கெல்லாம் அஞ்சுவோமா?: ரெய்டு ரவுசை அடித்து நொறுக்கிய டிடிவி...

சுருக்கம்

TTV Dinakaran exclusive press meet during IT Raid

தமிழகம் முழுக்க சசி - தினகரன் டீமுக்கு சொந்தமான மற்றும் அதை தழுவிய சுமார் 187 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த ரெய்டில் குறி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு முக்கிய அதிகார மையங்களில் ஒருவரான சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார்.

ஆக மற்றொருவரான தினகரன் சற்று முன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். எந்த அதிர்ச்சியும், அப்செட்டும் இல்லாமல் வழக்கமான தனது ‘டேக் இட் ஈஸி’ ஸ்டைலில் அவர் கொடுத்த பேட்டியின் ஹைலைட்ஸ் இதோ...

*    காலையில என் வீட்டுக்கு வரிமான வரித்துறையை சேர்ந்ததா ரெண்டு அதிகாரிங்க வந்தாங்க. அப்புறம் கிளம்பிட்டாங்க. இந்த சென்னை வீட்டுல எந்த ரெய்டும் நடக்கல. ஆனால் மன்னார்குடியிலுள்ள எங்க வீட்டுல நடக்குறதா தகவல், அதுவும் இப்போ முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன். 

*    இந்த ரெய்டு மூலமா அதை ஏவியவங்க அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியுது. ஆனா எடுத்துட்டுப் போக முறைகேடாக இங்கே எதுவுமில்லை. 

*    ரெய்டுக்கு பயப்படுற ஆட்கள் நாங்க இல்லை.

*    இதையெல்லாம் சின்ன வயசுலேயே பார்த்துட்டோம் சார். இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்.

*    இப்படியெல்லாம் பண்ணி என்ன பண்ணிட முடியும் எங்கள? என்ன அடிப்படையே இல்லாம கைது பண்ணுவாங்களா? கைது பண்ணி 25 வருஷம் ஜெயில்ல போட்டுடுவாங்களா? அப்புறம் என்ன பண்ண முடியும். வெளியில வந்து கட்சி வேலை பார்ப்பேன். அதுவரைக்கும் இந்த கழகம் கச்சிதமா இருக்கும். 

*    நான் உள்ளே போனாலும் இன்னும் மூணு வருஷத்துல சின்னம்மா வந்து கட்சியை வழி நடத்த ஆரம்பிச்சிடுவாங்க. யாருமே இல்லேன்னாலும் இந்த கட்சியின் கடைசி தொண்டன் கூட இயக்கத்தை வழி நடத்துவான். 

*    இந்த ரெய்டில் மத்திய அரசின் பங்கு இருந்தால், அவங்களுக்கு ஒரு அட்வைஸ். தயவு செய்து உங்களுடைய போக்கை மாத்திக்குங்க. 

*    எங்களை மிரட்ட முயற்சித்து என்ன பண்ணிட முடியும்? திகாரையே பார்த்தாச்சு. இந்த தமிழ்நாட்டு ஜெயிலுக்குள்ளே அடிப்படையே இல்லாத வழக்குல போடுவாங்களா? போடட்டுமே. 

*    ஐ.டி. துறை தன்னிச்சையாகவெல்லாம் இந்த ரெய்டை நடத்தல. எல்லாமே பின்னணி ஏவல்கள்ளதான் நடக்குது. 

*    எதுக்கும் அஞ்சுற ஆளுங்க நாஙக் இல்ல சார்! டி.வி. பேப்பர்ன்னு எதையும் முடக்க முடியாது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!