டிடிவி தினகரன், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை...

First Published Aug 21, 2017, 1:54 PM IST
Highlights
TTV Dinakaran consulted with senior lawyers


 கட்சி குறித்து சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து டிடிவி தினகரன், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம்  அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வர உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ்  இருவரும் சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு அணிகளும் இணைப்பிற்கு பிறகு இருவரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளதாகவும் , அணிகள் இணைப்பு காரணமாக ஓபிஎஸ்க்கு  துணை முதல்வர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் இறுதி நேரத்தில் இழுபறி ஏற்பட்டுள்தாக தெரிகிறது. சசிகலாவை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகே அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு வர முடியும் ஓ.பி.எஸ். அணியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பழனீசாமி தரப்பில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஓ. பன்னீர்செல்வம், தரப்பில் மாஃபா. பாண்டியராஜன், மைத்ரேயன் செம்மலை ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் இரு அணிளும் இன்று இணையவுள்ளதை அடுத்து துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்கிறார். இதையடுத்து அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் இன்று அவசரமாக சென்னை வருகை தந்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி தினகரன், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன், டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

click me!