அ.ம.மு.க.வில் 1 கோடி உறுப்பினர்களை தினகரன் சேர்த்தது எப்படி? புட்டு புட்டு வைத்த ஓ.பி.எஸ்!

By vinoth kumarFirst Published Aug 16, 2018, 10:20 AM IST
Highlights

அ.ம.மு.க.வில் இதுவரை ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக தினகரன் கூறிய நிலையில், அவர் எப்படி கட்சிக்கு ஆட்களை சேர்க்கிறார் என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் புட்டு புட்டு வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று சென்னையில் அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அ.ம.மு.கவில் இதுவரை ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக தினகரன் கூறிய நிலையில், அவர் எப்படி கட்சிக்கு ஆட்களை சேர்க்கிறார் என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் புட்டு புட்டு வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று சென்னையில் அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய தினகரன்,அ.ம.மு.கவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் இணைவதாக குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் பேர் முதல் 50 ஆயிரம் பேர் வரை அ.ம.மு.கவில் உறுப்பினர்களாகி உள்ளதாக தினகரன் தெரிவித்தார். மேலும் தற்போது வரை அ.ம.மு.கவில் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாகியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.கவில் மொத்தம் ஒன்றரை கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் தினகரன் தனது கட்சியில் ஒரு கோடி பேர் சேர்ந்திருப்பதாக கூறியதால் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா என்று கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளிக்குமாறு சென்னையில் இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ்சிடம் கேட்கப்பட்டது.  இதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ்., தினகரன் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். 

வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர், முகவரியை கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.ம.மு.க நிர்வாகிகள் நிரப்புவதாக ஓ.பி.எஸ் குறிப்பிட்டார். அ.ம.மு.கவில் உறுப்பினராகும் நபர்களுக்கு கூட அவர்கள் உறுப்பினர் ஆனது தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை எல்லாம் தங்கள் உறுப்பினர் பட்டியலில் அ.ம.மு.க நிர்வாகிகள் சேர்த்து வருவதாகவும் ஓ.பி.எஸ் கூறினார். இந்த உண்மை தெரியாமல் தினகரன் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டதாக பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் ஓ.பி.எஸ் குறிப்பிட்டார். அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!