பாரம்பரியம் மிக்க திமுக குடும்பம்... இருந்தும் பதற வைக்கும் பரமக்குடி..!

Published : Mar 21, 2021, 07:32 PM IST
பாரம்பரியம் மிக்க திமுக குடும்பம்... இருந்தும் பதற வைக்கும் பரமக்குடி..!

சுருக்கம்

திமுக சார்பில் களம் காணும் முருகேசன் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார்.

பரமக்குடி தனி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சதன் பிரபாகரன். அவருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் சீட் கேட்டு கிடைக்காதபோது சதன் பிரபாகரனுக்கு இம்முறை சீட் கிடைப்பதற்கு காரணம் அவர் எம்.எல்.ஏ.,வாக கடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோது ஓடோடிச் சென்று அனைத்து வேலையும் அனைவருக்கும் செய்து கொடுத்தது தான் காரணம் என்கிறார்கள். 

கட்சிப் பாகுபாடின்றி ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் அவருக்கு மீண்டும் அதிமுக தலைமை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. பாஜகவின் தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பும், ஜான்பாண்டியன் கட்சி கூட்டணியில் இருப்பதாலும், தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுக்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. நிச்சயம் இம்முறையும் அதிமுக அங்கு வெற்றி பெறக்கூடும் என்று கருதப்படுகிறது. திமுக சார்பில் களம் காணும் முருகேசன் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார். முருகேசனின் மனைவி 2006 முதல் 2016 வரை 10 ஆண்டுகள் பரமக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். 

பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தை சேர்ந்தவர். நான்கு செங்கல் சூளை, பெட்ரோல் பங்க் வைத்துள்ளனர். ஆனாலும், தொண்டர்களை பெயர் கூறி அழைக்கும் அளவிற்கு இருக்கும் செல்வாக்கு. கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றை பெற்றுள்ள சதன் பிரபாகர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை விரும்பிய முதல் சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர்.

இவர் கொரோனா சிகிச்சை பெற்ற போது தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இவருக்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இவருக்காக வழிபாடு நடத்தினார்கள். தேவர் சமுதாயத்தினரின் அன்பைப் பெற்று அந்த சமுதாத்தினரின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வருகிறார்.
இவரது தந்தை நிறைகுளத்தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களின் அன்பையும் பெற்றிருந்ததால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவையில் இடம் கொடுத்து அழகு பார்த்தார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!