டி.ஆர்.பாலு பதவி பறிப்பு..! ஸ்வீட் எடு.. கொண்டாடு..! தஞ்சையில் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்..!

By Selva KathirFirst Published Jan 29, 2020, 10:19 AM IST
Highlights

2009 நாடாளுமன்ற தேர்தல் வரை சென்னையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்தார் டி.ஆர். பாலு. வட சென்னை, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய தொகுதிகளில் நின்று வென்ற பாலு, மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் பாலுவுக்கு எப்போதுமே அவரது சொந்த மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை மீது ஆர்வம் அதிகம். அதனால் தான் தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் கிங்ஸ் பொறியியல் கல்லூரி, சாராய ஆலை என தனது பிசினஸ்களை அங்கு வைத்துக் கொண்டார்.

தஞ்சை மாவட்ட திமுகவையே தன் சுட்டு விரலுக்குள் வைத்து ஆட்டி வந்த டி.ஆர் பாலுவின் பதவி பறிக்கப்பட்டதால் அவரால் பதவி இழந்தவர்கள் ஸ்வீட் எடுத்து கொண்டாடித் தீர்த்தனர்.

2009 நாடாளுமன்ற தேர்தல் வரை சென்னையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்தார் டி.ஆர். பாலு. வட சென்னை, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய தொகுதிகளில் நின்று வென்ற பாலு, மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் பாலுவுக்கு எப்போதுமே அவரது சொந்த மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை மீது ஆர்வம் அதிகம். அதனால் தான் தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் கிங்ஸ் பொறியியல் கல்லூரி, சாராய ஆலை என தனது பிசினஸ்களை அங்கு வைத்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் சென்னை அரசியல் போர் அடித்துவிட சோழ மண்டலத்தை குறி வைத்தார் பாலு. இதற்கு கருணாநிதி சம்மதிக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் மூலமாக காய் நகர்த்தி தஞ்சையை கைப்பற்றினார் பாலு. தனக்கு வேண்டியவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி முதல் ஒன்றிய, கிளை செயலாளர்கள் பதவி வரை பெற்றுக் கொடுத்தார். இதனால் கோ.சி. மணிக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தனது சகோதரர் ராஜ்குமாரை களம் இறக்க பழனிமாணிக்கம் முடிவு செய்தார். ஆனால் அவருக்கு ஒரத்தநாடு தொகுதியை ஒதுக்கினார் ஸ்டாலின். இதனால் எரிச்சல் அடைந்த பழனிமாணிக்கம், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தனது தம்பி ராஜ்குமாரை வாபஸ் வாங்க வைத்தார். இந்த அளவிற்க டி.ஆர் பாலு வருகைக்கு பிறகு தஞ்சை திமுகவில் பிரச்சனை வெடித்தது.

ஆனால் 2014 ல் தஞ்சையில் போட்டியிட்டு பாலு தோற்ற நிலையிலும் கூட தஞ்சையில் தொடர்ந்து அவரது ஆதிக்கம் இருந்து வந்தது. ஆனால் கலைஞர் மறைவுக்கு பிறகு பழனிமாணிக்கத்திற்கு மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்க ஆரம்பித்தார் ஸ்டாலின். இதன் மூலம் பாலு ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு மீண்டும் பழனிமாணிக்கம் கை தஞ்சை திமுகவில் ஓங்க ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் தான் பாலுவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இதனை முதலில் அவருக்கு பிரமோசன் கொடுக்கப்போவதாக கருதி அமைதி காத்தனர் தஞ்சை திமுகவினர். ஆனால் இது பனிஸ்மென்ட் தான் என்பதை அறிந்து நேற்று ஸ்வீட் கொடுத்து கொண்டாடியுள்ளனர். மேலும் பாலுவால் ஓரங்கட்டப்பட்ட திமுகவினர் நேற்று காலை முதலே சாரை சாரையாக பழனிமாணிக்கம் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

click me!