ஏப்ரல் 20-ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் வசூல்... மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Apr 18, 2020, 7:50 AM IST
Highlights

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் ஏப்ரல் 20 ம்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் ஏப்ரல் 20 ம்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் கரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்தார். இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதில் தடங்கல் இல்லாமல் இருப்பதோடு, நேரத்தை மிச்சப்படுத்தவும் முடியும் என தெரிவித்தார்.

தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், ஏப்ரல் 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அவற்றிற்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதது அல்ல என அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

click me!