நீட் தேர்வு பிரச்சனையில் அடுத்து என்ன செய்யப் போறோம்?  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூடி இன்று முடிவு !!!

First Published Sep 4, 2017, 6:41 AM IST
Highlights
today opposite party meeting about NEET


அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க, இன்று  அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தகுதி இருந்தும் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இப்பிரச்சனை குறித்து அனைத்துகட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலனி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில்  சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீக் உள்ளிட்ட கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கவில்லை என திமுக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

tags
click me!