காலா கெட்டப்பில் கலக்கலாக வந்த எஸ்டிஆர்... “டாக்டராக விருப்பமில்லாத மலர் டீச்சர்!

First Published Mar 27, 2018, 6:17 PM IST
Highlights
today cinema combo news


காலா கெட்டப்பில் கலக்கலாக வந்த எஸ்டிஆர்...

சினிமா திரையுலகில் பலர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். சிம்பு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. தான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்பவர்  சிம்பு. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு, அந்த நிகழ்ச்சிக்கு அவர் “காலா” படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் மாஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் கைகளை தட்டியும், கரகோஷமிட்டும் அவரை வரவேற்றனர். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், காலா கெட்டப்பில் ரஜினியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் புகைப்படத்தையும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

“டாக்டராக விருப்பமில்லை, பட்டத்தைப் போட மாட்டேன்” அடம்பிடிக்கும் மலர் டீச்சர்!

தென்னிந்தியா ரசிகர்களை வசப்படுத்திய மலர் டீச்சர் சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்பதில் உடன்பாடு இல்லை அதனால் எம்.பி.பி.எஸ் படத்தை என் பெயரின் பின் சேர்த்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

மலையாள படமான “பிரேமம்” படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் மோஸ்ட் வான்ட்டட் முகமாக மாறினார். அவர் தெலுங்கில் அறிமுகமான ‘பிடா’ படமும்  செம்ம ஹிட். தற்போது தமிழில் விஜய் இயக்கும் “கரு” படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அத்துடன், தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக NGK படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாய் பல்லவி அளித்த பேட்டியில், கங்கன ரனாவத்திற்கு தோழியாக “தாம்தூம்” படத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு என் தந்தை சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் ஆறு வருடங்கள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும் என்று கூறி டாக்டர் படிப்பதற்காக ஜார்ஜியாவுக்கு அனுப்பி வைத்தார். அப்போது பிரேமம் படம் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்தேன், அது மிக பெரிய வெற்றியை எனக்கு கொடுத்ததால். அதனால் நான் முழுநேர கதாநாயகி ஆகிவிட்டேன். சினிமாவில் நடித்து கொண்டே டாக்டர் வேலை பார்பதில் எனக்கு உடன்பாடு இல்லை அதனால் என் பெயரின் பின் எம்.பி.பி.எஸ் என சேர்க்க விருப்பமில்லை என கூறியுள்ளார்.

click me!