போலீஸ் அதிகாரிகளின் பெயரைக் குறித்துக் கொண்ட ஸ்டாலின்…சட்டப் பேரவை வாயிலில் பரபரப்பு…

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
போலீஸ் அதிகாரிகளின் பெயரைக் குறித்துக் கொண்ட ஸ்டாலின்…சட்டப் பேரவை வாயிலில் பரபரப்பு…

சுருக்கம்

today tn budget

தமிழக சட்டப் பேரவையில் இன்று 2017 – 18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சட்டப் பேரவைக்கு வருகை தந்தனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, போலீஸ் உயர் அதிகாரிகள் சட்டப் பேரவைக்குள் நுழைந்து ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை தாக்கியதாக குற்றச் சாட்டு எழுந்தது.

இதனால் இந்த முறை சட்டப் பேரவையில் பாதுகாப்புக்கு எந்த போலீஸ் அதிகாரிகள் வந்ததுள்ளனர் என்பது குறித்து திமுக வினர் ஜாக்கிதையாக இருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று சட்டப் பேரவைக்குள் நுழையும் போது வாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின், அவர்களது பெயரை கேட்டு குறித்துக் கொண்டார்.

இதனால் சட்டப் பேரவை நுழைவு வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப் பேரவை வளாகத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்தி, தண்ணீர் பிரச்சனையை போக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் கோடை காலம் மட்டுமின்றி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கப்படும்.
இதேபோல், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.174 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!