TN Local body elections 2022 LIVE : தேர்தல் வாக்கு எண்ணிக்கையாவது நேர்மையாக நடத்தப்படுமா? பாஜக கேள்வி

சென்னை உள்பட 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சிகளுக்க்கான தேர்தல் களத்தின் நேரடி தகவல்கள்

9:56 PM

மாவட்ட வாரியாக இறுதி வாக்குபதிவு சதவீதம்..

திருப்பூர் - 60.66%, நாமக்கல் - 76.86%, விருதுநகர் - 69.24%, ராணிப்பேட்டை - 72.24%, மதுரை - 57.09%, தஞ்சை - 66%, மயிலாடுதுறை - 65.77%, நாகை - 69.19%, ராமநாதபுரம் - 68.03%, கள்ளக்குறிச்சி - 74.36%, திருவாரூர் - 68.25%, செங்கல்பட்டு - 49.64%, புதுக்கோட்டை - 69.61%, திருவள்ளூர் - 65.61%, தருமபுரி - 80.49%, வேலூர் - 66.68%, திருச்சி - 61.36%, தென்காசி - 70.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:26 PM

சேதமான வாக்குப்பதிவு இயந்திரம்..ஓடைக்குப்பத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா..?

சென்னை ஓடைக்குப்பம் 179 வது வார்ட்டில் திமுக வேட்பாளரின் உறவினர் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை சேதப்படுத்தியதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.வாக்குச்சாவடி மையத்திற்கு புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.பழைய வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எடுக்கலாம் என்று தொழில்பிரிவினர் கூறியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.மேலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை பற்றி சென்னை தேர்தல் அதிகாரியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

9:06 PM

வாக்கு எண்ணிக்கையாவது நேர்மையாக நடத்தப்படுமா - பாஜக கேள்வி

நகர்ப்புற தேர்தலில் ஆளும் கட்சியினரின் உத்தரவுகளை அப்படியே மாநில தேர்தல் ஆணையம் செய்துக் காட்டியுள்ளது என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளது.பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையாவது மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர இயங்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

8:47 PM

நகர்ப்புற தேர்தல் அமைதியாக நடைபெற்றது.. கூடுதல் பாதுகாப்பினால் வன்முறை சம்பவங்கள் தவிர்ப்பு..டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரி செய்யப்பட்டது என்று டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இதனிடையே சில நிகழ்வுகள் குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

8:32 PM

கொளத்தூர் வாக்குசாவடி மையத்தில் பாஜகவினர் தாக்குதல்..

சென்னை கொளத்தூர் எவர்வின் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சத்யா, திமுக உறுப்பினர் தமிழ்வாணன் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.மேலும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8:12 PM

பாஜகவின் போராட்டத்திற்கு பிறகே எல்.முருகனால் வாக்களிக்க முடிந்தது- அண்ணாமலை..

பாஜகவின் போராட்டத்திற்கு பிறகே மத்திய இணையமைச்சர் எம்.முருகன் தமது வாக்கினை செலுத்த முடிந்ததாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும் அவருடைய வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 1174, அவர் வருவதற்கு முன்பாகவே வாக்கு செலுத்தப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த வாக்கினை செலுத்தியது யார்.. அனுமதித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

7:44 PM

ஹிஜாப் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் கைது

மதுரை மேலூரில் வாக்குசாவடியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

7:33 PM

நகர்ப்புற தேர்தல் முறைகேடு..மறுவாக்குப்பதிவு கோரி அதிமுக மனு

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாகவும் திமுக அராஜகத்தில் ஈடுப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மீண்டும் நடந்தப்படவேண்டும் எனவும் கோரி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டபிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் மனுவினை அளித்தார்.

7:01 PM

மார்ச் 4 ல் மறைமுக தேர்தல்..சென்னை மேயர் யார்..? பெரும் எதிர்பார்ப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் செவ்வாயன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம தேதி பதவியேற்கின்றனர்.தொடர்ந்து மார்ச் 4 ல் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.அதன்படி, மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர்கள்,துணை மேயர்கள், நகராட்சி , பேரூராட்சி தலைவர்கள், துணைதலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

6:49 PM

ஆர்.கே.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் கண்ணாடி உடைப்பு

புதுவண்ணாரப்பேட்டையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசரின் கார் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்கியதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

6:41 PM

மதுரை திருமங்கலம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு..?

மதுரை திருமங்கலம் நகராட்சியில் 17 வது வார்டில் மறுவாக்குபதிவு நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கள்ள ஓட்டுகள் செலுத்தப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:29 PM

சென்னை மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் காலையில் இருந்து மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மாலை சற்று அதிகரித்தது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகி இருந்தது.காலை 9 மணி நிலவரப்படி 3.96%,11 மணி நிலவரப்படி 17.88%,1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குகள் பதிவாகின.

6:21 PM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் மார்ச் 2ல் பதவியேற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர் மார்ச் 2ல் பதவியேற்கின்றனர். 21 மாநகராட்சி, 138 நகராட்சி,489 பேரூராட்சிகள் என 648  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1,369 மாநகராட்சி,3,824 நகராட்சி,7,409 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.வேட்பாளர்கள் மரணம், போட்டியின்றி தேர்வு உட்பட மொத்தம் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் மாநகராட்சியில் 11,196 பேர், நகராட்சியில் 17,992 பேர், பேரூராட்சியில் 28,660 பேர் போட்டியிட்டனர்.

6:13 PM

பிப்.,22 ஆம் தேதி செவ்வாயன்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் பிப்.,22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.மேலும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் 5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

6:06 PM

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததால்  மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.தேர்தல் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

6:03 PM

முடிந்தது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..மாலை 6 மணியுடன் நிறைவுப் பெற்ற வாக்குபதிவு

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.மேலும் உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.

5:43 PM

இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையவுள்ள வாக்குப்பதிவு..

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க முடியும்.

5:37 PM

கடைசி இடத்தில் சென்னை.. முதல் இடத்தில் தருமபுரி..தற்போதைய நிலவரம்

சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளது. 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.மாநிலத்திலே சென்னை மாநகராட்சியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிக அளவு வாக்குப்பதிவில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 64.68 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

5:22 PM

மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்.

சென்னை அண்ணாநகர் வாக்குசாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார் .முன்னதாக அவரது வாக்கினை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிருந்தார். அதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்கினை யாரும் போடவில்லை எனவும் .சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்று தான் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

5:18 PM

வாக்குப்பதிவு நிறைவு..டோக்கன் முறையில் வாக்களிக்க அனுமதி..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி  அளிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5:09 PM

கொரோனா பாதித்தோருக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கிய நிலையில் 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.இந்த தேர்தலில் மாநிலத்திலே குறைந்தபட்சமாக சென்னையில் 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 60.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:50 PM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 3 மணி நேர நிலவரப்படி 47.18% வாக்குப்பதிவு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாநிலத்திலே அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாநகராட்சிகளில் 39.13%, நகராட்சிகளில் 53.49%. பேரூராட்சிகளில் 61.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.சென்னை மநகாராட்சியில் 3 மணி நேர நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:45 PM

கோவையில் வாக்குச்சாவடி வாசலில் பண விநியோகம் - அண்ணாமலை

திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர்.அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது  என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

4:40 PM

சென்னையில் கள்ள ஓட்டு போட்ட நபர் சிக்கினார்

சென்னை திருமங்கலத்தில் போலி அடையாள அட்டையுடன் கள்ள ஓட்டு போட்ட நபர் பிடிப்பட்டார். கள்ள ஓட்டு போட்ட உதயகுமார் என்பவரை மண்டல அதிகாரி பிடித்து உடனடியாக போலீசில் ஒப்படைத்தார்.

4:25 PM

எல்.முருகன் வாக்கை யாரும் போடவில்லை..மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்கை யாரும் போடவில்லை எனவும் அவர் வாக்களிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்று தான் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இணையமைச்சர் எல்.முருகன் வாக்கு வேறு ஒரு நபரால் கள்ளவாக்காக போடப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

4:20 PM

சென்னையில் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்து வருகிறது.காலை 9 மணி நிலவரப்படி 3.96%,11 மணி நிலவரப்படி 17.88%,1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குகள் பதிவான நிலையில் 3 மணி நிலவரப்படி 31.89 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:13 PM

கோவை மாநகராட்சியில் இன்றும் வழங்கப்படும் பரிசுப்பொருட்கள்..?-வீடியோ வைரல்

"

கோவை மாநகராட்சியில் 63 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் காவிதா ராஜன் என்பவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்றும் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட்பாகஸ் உள்ளிட்ட பரிசுபொருட்கள் கொடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டியுள்ளார்.மேலும் வெளியூர் சேர்ந்தவர்கள் காவல்நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்திலே தங்கியுள்ளனர். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

3:52 PM

முதல் முறையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய நரிக்குறவ மக்கள்..

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 40 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள், முதல்முறையாக அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் சென்று உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

3:48 PM

பயணிகளிடம் அனுமதி கேட்டு பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்..

தருமபுரி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜனநாயக கடமையாற்றினார்.பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார்

3:42 PM

புதுவண்ணாரப்பேட்டையில் அதிமுக - திமுக கைகலப்பு

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 39 வது வார்டு தேசிய நகரில் அதிமுக- திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.பூத் ஸ்லிப் வழங்கியது தொடர்பான ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கிக்கொண்டதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

3:27 PM

நடிகர்கள் சூர்யா, கார்த்திக் வாக்களித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகர் வாக்குசாவடியில் நடிகர்கள் சூர்யா,கார்த்திக் இருவரும் வாக்களித்தனர்.

3:22 PM

ஸ்டிரெச்சரில் வந்து வாக்களித்த பெண்மணி!

"

ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையிலும் ஸ்டிரெச்சரில் வந்து வாக்களித்து விட்டு சென்றார்.

3:14 PM

டாஸ்மாக் கடை திறந்து ஜோராக நடைபெறும் விற்பனை..சரக்கு வாங்க சாரை சாரையாக குவிந்த குடிமகன்கள்.

"

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் டாஸ்மாக் மதுபானக் கடை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.

3:04 PM

வாக்குச்சாவடிகளில் அதிமுக, பா.ஜ.கவினர் வாக்கு சேகரித்ததால் பிரச்சனை..

பழனி நகராட்சி 16,17-வது வார்டுகளின் வாக்குச்சாவடிகளில் அதிமுக, பா.ஜ.க.வினர் வாக்கு சேகரித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் வெளியேற்றப்பட்டார். வாக்குச்சாவடிக்குள் வாக்கு கேட்ட பா.ஜ.க. நிர்வாகி கந்தசாமி என்பவரையும் போலீசார் வெளியேற்றினர்
 
3:00 PM

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்காணித்து வருகிறோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, அதுவும் பின்னர் சரி செய்யப்பட்டுள்ளது எனவும் வாக்குப்பதிவு எண்ணும் 15 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 
 
2:50 PM

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி மற்ற மாவட்டங்களை விட சென்னை மாநகராட்சியில் தான் குறைவான சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:45 PM

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு..

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 50.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:36 PM

தமிழகத்தில் ஒரு மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. கரூர் 50.4%, தருமபுரி 48.8%,கள்ளக்குறிச்சி 47.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 50.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னை மாநகராட்சியில் தான் குறைந்தபட்சமாக  23.42% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2:28 PM

ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக வாக்களிக்கிறேன் - சசிகலா உருக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113 வது வார்டு தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை  செலுத்தினார்.இதுவரை அக்காவுடன் (ஜெயலலிதா)சேர்ந்துதான் வாக்களித்துள்ளதாகவும் இந்த முறை தனியாக வாக்களித்துள்ளதாகவும் வி.கே.சசிகலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

2:22 PM

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வாக்களித்தார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.உங்கள் அடுத்த ஓட்டு இந்த பூமியின் மறுபக்கத்தில் இருக்கலாம்.ஆனால் நகர்புற  உள்ளாட்சி வாக்கை இன்று பதிவு செய்யுங்கள் என்று கூறினார்.

2:16 PM

சென்னையில் 1 மணி நிலவரப்படி 23.41% வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 1 மணி நிலவரப்படி 23.41% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.11 மணி நிலவரப்படி 17.88% வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது.
 
2:08 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வாக்களித்தார்.

சென்னை ஆழவார்பேட்டை வாக்குசாவடியில் தனது வாக்கினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பதிவு செய்தார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம கட்சி தனித்து போட்டியிடுகிறது.

2:10 PM

2 மணிக்கு மேலதான் திமுகவோட கச்சேரியே ஆரம்பிக்கும்.. ஆளுங்கட்சியின் திட்டத்தை அம்பலப்படுத்தும் ஜெயக்குமார்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சென்னையில் தனது வாக்கைப் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவுசெய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ``தி.மு.க-வை பொறுத்தவரை வரை இனிமேல் தான் அவர்களின் கச்சேரியை தொடங்கப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதை 2 மணிக்கு மேல் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை திமுகவினர் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதை நீங்களும் பார்ப்பீர்கள்.

பூத் சிலிப்பை அரசு அலுவலர்கள்தான் வழங்க வேண்டும். ஆனால், திமுகவினர் விநியோகம் செய்கின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் அடைந்த 9 மாத துன்பம் அதிமுகவுக்கு வாக்காக மாறும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

1:48 PM

திருவாரூர் மாவட்ட 1 மணி நிலவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நிலவரப்படி 43.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது

1:47 PM

நாகப்பட்டினம் மதியம் 1 மணி வாக்கு நிலவரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 1 மணி நிலவரப்படி 41.09 சதவீதம் பதிவாகி உள்ளது.

1:43 PM

சர்கார் பட பாணியில் வாக்களித்த முதியவர்

நெல்லை 26வது வார்டில் நாகராஜன் என்பவரது வாக்கினை வேறொருவர் செலுத்தியதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, தேர்தல் விதிப்படி படிவம் 22ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கை நாகராஜன் பதிவு செய்தார்.

1:31 PM

வாக்கை செலுத்திய ஜி.கே.வாசன்

ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தனது வாக்கினை செலுத்தினார்.

1:30 PM

ஓட்டு போடுறது டாஸ்க்... முகத்துல போடணும் மாஸ்க்.. நடிகர் டி.ராஜேந்தர்

சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதவா பள்ளி வாக்குச்வாடியில் நடிகர் டி.ராஜேந்தர் தனது வாக்கை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியலில் எம்ஜிஆர் கொடி நாட்டிவிட்டு சென்றதால் திரைத்துறையினர் என்றாலே அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர். தலைவர்களுக்கு வைத்துவிட்டோம் சிலை.  அவர்களுடைய கொள்கைகளுக்கு வைத்துவிட்டோம் உலை. ஓட்டுக்கு பேசுகிறார்கள் விலை. ஓட்டுக்காக வீசுகிறார்கள் வலை.  எந்த கட்சிக்கும் வீசவில்லை அலை. இதுதான்  உண்மை நிலை. ஓட்டுப் போடுவது டாஸ்க். முகத்தில்  போட்டு வந்தேன் மாஸ்க். மக்கள் ஜனநாயகக் கடமையற்ற  வேண்டும். நடிகர் சிம்பு படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வருவது சிரமம். எனவும்  டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1:21 PM

பக்கவாதத்திலும் ஜனநாயக கடமை

திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அம்சா என்ற பெண் ஆம்புலன்சில் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

1:20 PM

பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு வாக்களித்த தனியார் பேருந்து ஓட்டுநர்

தர்மபுரி பொம்மிடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பேருந்து ஒட்டுனர் பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு தனது ஜனநாயக கடைமையையாற்றினர்.

1:18 PM

கேமரா மேன்களை வெளியேற்றி வாக்குப்பதிவு செய்த கமல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு விவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார். அப்போது, அங்கு கூடியிருந்த கேமரா மேன்களை வெளியேற்றினால் தான் ஓட்டு போடுவேன் கமல்  கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

1:05 PM

மின்சாரம் துண்டிப்பு.. செல்போன் டார்ச்லைட்டை அடித்து வாக்களித்த மக்கள்

திருவாரூர் நகராட்சி உட்பட்ட தெற்கு வீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்களுடைய செல்ே பானில் டார்ச் லைட்டை அடித்து மக்கள் ஜனநாயக கடமையற்ற உதவினர். சுமார் 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது. 

1:01 PM

இதுவரை பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை மாநகராட்சி தேர்தலில் இதுவரை பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. அமைதியாக வாக்குபதிவு நடைபெறுகிறது. 
வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். 
 
12:59 PM

திருவண்ணாமலையில் பரபரப்பு.. அனைத்து வேட்பாளர்களும் திடீர் சாலை மறியல்

திருவண்ணாமலை சண்முகா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரியான முறையில் தேர்தல் நடத்தவில்லை என்று கூறி, எதிரே உள்ள நெடுஞ்சாலையில் அனைத்து கட்சியை சார்ந்த வேட்பாளர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:57 PM

என் வாக்கை திமுக வேட்பாளர் போட்டுவிட்டார்... தர்ணாவில் ஈடுபடும் பெண்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி தனது வாக்கை பதிவு செய்ததாக முத்துலட்சுமி என்ற பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12:55 PM

செங்கல்பட்டு மாநகராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி மிகக்குறைந்த சதவீதம் வாக்குப்பதிவு நடந்த மாநகராட்சியாக செங்கல்பட்டு உள்ளது. குறைந்தபட்சம்10.65 சதவீதம் வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது. அதேபோல், பேரூராட்சியில் 26,54 சவீதமும், நகராட்சியில் 16.77 சதவீதம் பதிவாகியுள்ளது.

12:46 PM

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குப்பதிவு

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணிநேர நிலவரப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் விவரம் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் 17.93 சதவீதம், நகராட்சிகளில் 24.53 சதவீதம், பேரூராட்சிகளில் 28.42 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 21.69 சதவீத வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர்.

12:27 PM

மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த கனிமொழி

நகர்ப்புற உள்ளட்சி தேர்தலில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார்.

12:27 PM

வாக்களிக்க வராத விஜயகாந்த்.. வாக்களித்து விட்டு திமுக, அதிமுகவை புரட்டி எடுத்த பிரேமலதா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். ஆளும் கட்சியோ ஆண்ட கட்சி ,  மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும் பணம் கொலுசு,டிபன் பாக்ஸில்  மூக்குத்தி வைத்து  வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். நியாயமாக தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் வாக்களிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

11:59 AM

மேலூர் ஹிஜாப் விவகாரம் .. ஆட்சியரிடம் விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

 மதுரை மேலூர் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும் என  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

11:58 AM

மக்களிடம் இருந்து ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்த பணம் தேர்தலின் போது மக்களிடமே போய் சேருவது மகிழ்ச்சி.. டிடிவி தினகரன்

நகர்ப்புற உள்ளட்சி தேர்தலில் சென்னை அடையாறில் உள்ள தமோதரபுரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதை காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களிடம் இருந்து ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்த பணம் தேர்தலின் போது மக்களிடமே போய் சேருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

11:49 AM

ஜெயலலிதா பயன்படுத்திய காரில் வந்து வாக்களித்த சசிகலா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி காரில் சசிகலா தியாகராயநகரில் உள்ள வித்யோதவா பள்ளி வாக்குச்வாடியில் தனது வாக்கை பதிவு செயதார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எப்போதும் அம்மாவுடன் வாக்களித்த நான் இம்முறை தனியாக வந்து வாக்களித்துள்ளேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் . அராஜம் செய்யக் கூடாது என்றார்.

11:43 AM

மகனுடன் வந்து வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனான தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி இருவரும் பெரியகுளம் பகுதியில் வாக்களித்தனர்.

11:42 AM

ஜெயலலிதா பயன்படுத்தி காரில் வாக்களிக்க சசிகலா வருகை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி காரில் வாக்களிக்க சசிகலா வருகை தந்துள்ளார். இவரது வருகையையொட்டி வாக்குச்சவாடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

11:29 AM

தமிழ்நாட்டில் 8.21 சதவீதம் வாக்குகள் பதிவு.. மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிநேர நிலவரப்படி மாநகராசடி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் விவரம் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால், அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து, அவர்கள் ஓட்டளிக்க நேரம் கடந்தாலும், அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் குறைவான வாக்கு பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இனிமேல் சூடுபிடிக்கும் என நம்புகிறேன். இப்போது சென்னையில் வாக்காளர்கள் வரத்தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது என்றார். 

11:23 AM

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் சென்று வாக்களித்தார்

சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, செந்தாமரை ஆகியோர் வாக்களித்தனர்.

11:00 AM

30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த ரஜினிகாந்த் ரசிகர் வாக்களிப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் வாக்களிப்பேன் என கடந்த 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த மகேந்திரன் என்பவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக தனது வாக்கினை பதிவு செய்தார்.

10:47 AM

அதிமுக வாக்களிக்க பரிசுப் பொருட்கள், பணம் கொடுத்தாலும் திமுக ஜெயிக்கும்.. அமைச்சர் மூர்த்தி

மதுரை ஐயர் பங்களா சேவியர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வணிகம் மற்றம் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுகவினர் வாக்களிக்க பரிசுப் பொருட்கள், பணம் கொடுத்தாலும் முதலமைச்சர் மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களால் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

10:37 AM

மேலூர் நகராட்சியில் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக பூத் ஏஜெண்ட் வாக்குவாதம்

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

10:33 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டுகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் - 11.03%, கடலூர் - 10.11%, தி.மலை - 18.5%, விருதுநகர் - 8.9%, ராமநாதபுரம் - 8.88%, தஞ்சை - 6.1%, புதுக்கோட்டை - 11%, சேலம் - 12.97%, தேனி - 12% பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

10:29 AM

நாங்க வெற்றி பெற்றாலும் யாருக்கும் ஆதரவு கிடையாது.. தோற்றாலும் கவலையில்லை.. அசராத சீமான்

சென்னை ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் யாருக்கும் ஆதரவு கிடையாது. தோற்றாலும் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

10:26 AM

வாக்குச்சாவடியில் வந்து வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் திமுக.. கொதிக்கும் அதிமுக

சேலம் மாநகராட்சி குகை மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் திமுகவினர் வாக்கு கேட்பதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிமுக வேட்பாளர் தங்கதாமரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10:24 AM

மக்களை நம்பி தனித்து போட்டி.. பாஜக அமோக வெற்றி பெறும்.. நயினார் நாகேந்திரன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன்  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஜெயேந்திரா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களை நம்பி நாங்கள் களத்தில் நிற்கிறோம். அதிமுக பணம் கொடுத்ததாக செய்தி வரவில்லை தனித்து களம் காணும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். காலையில் இருந்து தற்போது வரை அமைதியாக தேர்தல் நடைபெறுகிறது. போகப்போகத்தான் எவ்வாறு நடைபெறும் என்பது தெரியவரும்.

10:19 AM

அரை நிர்வாணத்துடன் வாக்களித்த வந்த நபரால் பரபரப்பு

சிவகங்கையில் நகை மதிப்பீட்டாளர் மகேஷ்பாபு என்பவர் அரை நிர்வாணத்துடன்  வாக்களிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அரை நிர்வாணத்துடன் வாக்களிக்க வந்தவரை  போலீசார் தடுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. பணிநிரந்தர கோரிக்கையை முன்வைத்து அவர் அவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது. 

10:01 AM

ராணுவம் பாதுகாப்புக்கு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை... முதல்வர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும். வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கோவையில் ராணுவம் பாதுகாப்புக்கு வரும் அளவிற்கு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை.

9:40 AM

வாக்குப்பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கும் முதல்வர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் 
குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கிறார். 

9:37 AM

வாக்குப்பதிவு இயந்திரம் திடீர் பழுது... வாக்களிக்க காத்திருந்த திருச்சி சிவா

திருச்சி மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள  வெஸ்ட்டரி மேல்நிலைப்பள்ளி   வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஆனதால் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காத்திருக்கின்றார். 

9:35 AM

தனது வாக்கினை பதிவு செய்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார்.

9:31 AM

தைரியம் இருப்பதால்தான் பாஜக தனித்து போட்டு... சரவெடியாய் வெடித்த குஷ்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மந்தைவெளில் பாஜக செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எனக்கு இன்று தேர்தல் மாதிரி தெரியவில்லை. தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

9:25 AM

வாகனங்களில் அழைத்து வந்து திமுகவுக்கு வாக்களிக்க வற்புறுத்தல்.. அதிமுக குற்றச்சாட்டு

மதுரை பசுமலையில் வாக்காளர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க திமுகவினர் வற்புறுத்துவதாக அதிமுகவினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால், அதிமுகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

9:22 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. இன்று சம்பளத்துடன் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:16 AM

பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை போட்டுவிட்டு அதிமுகவினர் தப்பியோட்டம்

சென்னை திருவான்மியூர் 179வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை போட்டுவிட்டு அதிமுகவினர் தப்பிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

9:09 AM

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி கதிர்ஆனந்த் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

9:08 AM

கரூரில் அதிமுகவினர் வழங்கவிருந்த செல்போன்கள் பறிமுதல்

கரூர் மாநகராட்சியில் 38 வார்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

9:03 AM

தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்த 90 வயதுடைய மூதாட்டி

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் தள்ளாடும் வயதிலும் வந்து தனது ஜனநாயக கடமையை மூதாட்டி ராமாயி ஆற்றினார். 

9:00 AM

தில்லுமுல்லு செய்ய திமுக முயற்சி.. விடாமல் போட்டு தாக்கும் எஸ்.பி.வேலுமணி

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில்  கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோவை அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதால், அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஏதாவது தில்லுமுல்லு செய்ய திமுக முயல்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

8:55 AM

பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

8:50 AM

மார்க்சிஸ்ட் வேட்பாளர் மீது போலீஸ் தாக்குதல்... பதற்றம் போலீஸ் குவிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சூர்யாவை ஏடிஎஸ்பி கணேஷ் சாந்தா தாக்கியதாக குற்றச்சாட்ட எழுந்துள்ளது.  காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:48 AM

ராமநாதபுரம் நகராட்சியில் வீல்சேர் இல்லாததால் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி

ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் வீல்சேர் இல்லாததால் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

8:44 AM

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது...

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி வார்டு 16ல், திருச்சி 58வது வார்டு, கடலூர் மாநகராட்சி 5வது வார்டில் வாக்குச்சவாடியில் இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

8:24 AM

திமுக கட்சி கண்டிப்பாக வெற்றி பெரும்... அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் நகராட்சியில் 18வது வார்டில் ஓட்டேரியில் சசிரேகா பிரபு அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் குடும்பத்துடன் வந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நிச்சயமாக விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் திமுக மாபெரும் வெற்றி அடையும். அதேபோல், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மாபெரும் வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8:14 AM

ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மக்கள் முடிவு.. ஈவிகேஎஸ் இளங்கோவன்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

8:10 AM

கடலூர் மாநகராட்சி 5வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுது

கடலூர் மாநகராட்சி 5வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்.

8:07 AM

அனைவரும் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும்... சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ககன்தீப் சிங் பேடி;-  அனைவரும் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும்; வாக்கு பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

8:05 AM

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு செலுத்தினார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவெறும்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு செலுத்தினார்.

8:04 AM

வாக்களிக்க புறப்பட்டார் ரஜினி

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய நடிகர் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டார். 

8:03 AM

திருவாரூரில் கொட்டும் மழையில் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 

8:00 AM

கோவையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்.. அமைச்சர் கே.என்.நேரு உறுதி

திருச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோவையில் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

7:53 AM

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்களித்தார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

7:43 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... தேர்தல் ஆணையர் வாக்களித்தார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள  பத்ம சேஷாத்ரி பள்ளியில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

9:57 PM IST:

திருப்பூர் - 60.66%, நாமக்கல் - 76.86%, விருதுநகர் - 69.24%, ராணிப்பேட்டை - 72.24%, மதுரை - 57.09%, தஞ்சை - 66%, மயிலாடுதுறை - 65.77%, நாகை - 69.19%, ராமநாதபுரம் - 68.03%, கள்ளக்குறிச்சி - 74.36%, திருவாரூர் - 68.25%, செங்கல்பட்டு - 49.64%, புதுக்கோட்டை - 69.61%, திருவள்ளூர் - 65.61%, தருமபுரி - 80.49%, வேலூர் - 66.68%, திருச்சி - 61.36%, தென்காசி - 70.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:26 PM IST:

சென்னை ஓடைக்குப்பம் 179 வது வார்ட்டில் திமுக வேட்பாளரின் உறவினர் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை சேதப்படுத்தியதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.வாக்குச்சாவடி மையத்திற்கு புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.பழைய வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எடுக்கலாம் என்று தொழில்பிரிவினர் கூறியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.மேலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை பற்றி சென்னை தேர்தல் அதிகாரியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

9:07 PM IST:

நகர்ப்புற தேர்தலில் ஆளும் கட்சியினரின் உத்தரவுகளை அப்படியே மாநில தேர்தல் ஆணையம் செய்துக் காட்டியுள்ளது என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளது.பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையாவது மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர இயங்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

8:48 PM IST:

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரி செய்யப்பட்டது என்று டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இதனிடையே சில நிகழ்வுகள் குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

8:33 PM IST:

சென்னை கொளத்தூர் எவர்வின் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சத்யா, திமுக உறுப்பினர் தமிழ்வாணன் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.மேலும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8:13 PM IST:

பாஜகவின் போராட்டத்திற்கு பிறகே மத்திய இணையமைச்சர் எம்.முருகன் தமது வாக்கினை செலுத்த முடிந்ததாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும் அவருடைய வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 1174, அவர் வருவதற்கு முன்பாகவே வாக்கு செலுத்தப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த வாக்கினை செலுத்தியது யார்.. அனுமதித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

7:47 PM IST:

மதுரை மேலூரில் வாக்குசாவடியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

7:35 PM IST:

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாகவும் திமுக அராஜகத்தில் ஈடுப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மீண்டும் நடந்தப்படவேண்டும் எனவும் கோரி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டபிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் மனுவினை அளித்தார்.

7:01 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் செவ்வாயன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம தேதி பதவியேற்கின்றனர்.தொடர்ந்து மார்ச் 4 ல் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.அதன்படி, மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர்கள்,துணை மேயர்கள், நகராட்சி , பேரூராட்சி தலைவர்கள், துணைதலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

6:49 PM IST:

புதுவண்ணாரப்பேட்டையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசரின் கார் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்கியதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

6:42 PM IST:

மதுரை திருமங்கலம் நகராட்சியில் 17 வது வார்டில் மறுவாக்குபதிவு நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கள்ள ஓட்டுகள் செலுத்தப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6:29 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் காலையில் இருந்து மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மாலை சற்று அதிகரித்தது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகி இருந்தது.காலை 9 மணி நிலவரப்படி 3.96%,11 மணி நிலவரப்படி 17.88%,1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குகள் பதிவாகின.

6:22 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர் மார்ச் 2ல் பதவியேற்கின்றனர். 21 மாநகராட்சி, 138 நகராட்சி,489 பேரூராட்சிகள் என 648  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1,369 மாநகராட்சி,3,824 நகராட்சி,7,409 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.வேட்பாளர்கள் மரணம், போட்டியின்றி தேர்வு உட்பட மொத்தம் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் மாநகராட்சியில் 11,196 பேர், நகராட்சியில் 17,992 பேர், பேரூராட்சியில் 28,660 பேர் போட்டியிட்டனர்.

6:14 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் பிப்.,22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.மேலும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் 5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

6:07 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததால்  மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.தேர்தல் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

6:03 PM IST:

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.மேலும் உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.

5:48 PM IST:

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க முடியும்.

5:38 PM IST:

சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளது. 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.மாநிலத்திலே சென்னை மாநகராட்சியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிக அளவு வாக்குப்பதிவில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 64.68 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

5:28 PM IST:

சென்னை அண்ணாநகர் வாக்குசாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார் .முன்னதாக அவரது வாக்கினை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிருந்தார். அதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்கினை யாரும் போடவில்லை எனவும் .சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்று தான் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

5:18 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி  அளிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5:09 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கிய நிலையில் 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.இந்த தேர்தலில் மாநிலத்திலே குறைந்தபட்சமாக சென்னையில் 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 60.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:50 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாநிலத்திலே அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாநகராட்சிகளில் 39.13%, நகராட்சிகளில் 53.49%. பேரூராட்சிகளில் 61.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.சென்னை மநகாராட்சியில் 3 மணி நேர நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:45 PM IST:

திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர்.அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது  என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

4:40 PM IST:

சென்னை திருமங்கலத்தில் போலி அடையாள அட்டையுடன் கள்ள ஓட்டு போட்ட நபர் பிடிப்பட்டார். கள்ள ஓட்டு போட்ட உதயகுமார் என்பவரை மண்டல அதிகாரி பிடித்து உடனடியாக போலீசில் ஒப்படைத்தார்.

4:25 PM IST:

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்கை யாரும் போடவில்லை எனவும் அவர் வாக்களிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்று தான் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இணையமைச்சர் எல்.முருகன் வாக்கு வேறு ஒரு நபரால் கள்ளவாக்காக போடப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

4:20 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.வாக்குப்பதிவு தொடங்கியது முதலே சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்து வருகிறது.காலை 9 மணி நிலவரப்படி 3.96%,11 மணி நிலவரப்படி 17.88%,1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குகள் பதிவான நிலையில் 3 மணி நிலவரப்படி 31.89 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

4:13 PM IST:

"

கோவை மாநகராட்சியில் 63 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் காவிதா ராஜன் என்பவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்றும் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட்பாகஸ் உள்ளிட்ட பரிசுபொருட்கள் கொடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டியுள்ளார்.மேலும் வெளியூர் சேர்ந்தவர்கள் காவல்நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்திலே தங்கியுள்ளனர். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

3:52 PM IST:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 40 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் நரிக்குறவர் இன மக்கள், முதல்முறையாக அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் சென்று உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

3:49 PM IST:

தருமபுரி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜனநாயக கடமையாற்றினார்.பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார். பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார்

3:42 PM IST:

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 39 வது வார்டு தேசிய நகரில் அதிமுக- திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.பூத் ஸ்லிப் வழங்கியது தொடர்பான ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கிக்கொண்டதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

5:50 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர் விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகர் வாக்குசாவடியில் நடிகர்கள் சூர்யா,கார்த்திக் இருவரும் வாக்களித்தனர்.

3:22 PM IST:

"

ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையிலும் ஸ்டிரெச்சரில் வந்து வாக்களித்து விட்டு சென்றார்.

3:15 PM IST:

"

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் டாஸ்மாக் மதுபானக் கடை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.

3:05 PM IST:

பழனி நகராட்சி 16,17-வது வார்டுகளின் வாக்குச்சாவடிகளில் அதிமுக, பா.ஜ.க.வினர் வாக்கு சேகரித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் வெளியேற்றப்பட்டார். வாக்குச்சாவடிக்குள் வாக்கு கேட்ட பா.ஜ.க. நிர்வாகி கந்தசாமி என்பவரையும் போலீசார் வெளியேற்றினர்
 
3:01 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்காணித்து வருகிறோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, அதுவும் பின்னர் சரி செய்யப்பட்டுள்ளது எனவும் வாக்குப்பதிவு எண்ணும் 15 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 
 
2:50 PM IST:

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி மற்ற மாவட்டங்களை விட சென்னை மாநகராட்சியில் தான் குறைவான சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:46 PM IST:

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 50.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:36 PM IST:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. கரூர் 50.4%, தருமபுரி 48.8%,கள்ளக்குறிச்சி 47.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 50.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னை மாநகராட்சியில் தான் குறைந்தபட்சமாக  23.42% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2:29 PM IST:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113 வது வார்டு தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை  செலுத்தினார்.இதுவரை அக்காவுடன் (ஜெயலலிதா)சேர்ந்துதான் வாக்களித்துள்ளதாகவும் இந்த முறை தனியாக வாக்களித்துள்ளதாகவும் வி.கே.சசிகலா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

2:23 PM IST:

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.உங்கள் அடுத்த ஓட்டு இந்த பூமியின் மறுபக்கத்தில் இருக்கலாம்.ஆனால் நகர்புற  உள்ளாட்சி வாக்கை இன்று பதிவு செய்யுங்கள் என்று கூறினார்.

2:16 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 1 மணி நிலவரப்படி 23.41% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.11 மணி நிலவரப்படி 17.88% வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது.
 
2:11 PM IST:

சென்னை ஆழவார்பேட்டை வாக்குசாவடியில் தனது வாக்கினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பதிவு செய்தார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம கட்சி தனித்து போட்டியிடுகிறது.

2:10 PM IST:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சென்னையில் தனது வாக்கைப் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவுசெய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ``தி.மு.க-வை பொறுத்தவரை வரை இனிமேல் தான் அவர்களின் கச்சேரியை தொடங்கப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதை 2 மணிக்கு மேல் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை திமுகவினர் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதை நீங்களும் பார்ப்பீர்கள்.

பூத் சிலிப்பை அரசு அலுவலர்கள்தான் வழங்க வேண்டும். ஆனால், திமுகவினர் விநியோகம் செய்கின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் அடைந்த 9 மாத துன்பம் அதிமுகவுக்கு வாக்காக மாறும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

1:49 PM IST:

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நிலவரப்படி 43.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது

1:47 PM IST:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 1 மணி நிலவரப்படி 41.09 சதவீதம் பதிவாகி உள்ளது.

1:44 PM IST:

நெல்லை 26வது வார்டில் நாகராஜன் என்பவரது வாக்கினை வேறொருவர் செலுத்தியதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, தேர்தல் விதிப்படி படிவம் 22ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கை நாகராஜன் பதிவு செய்தார்.

1:31 PM IST:

ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தனது வாக்கினை செலுத்தினார்.

1:30 PM IST:

சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதவா பள்ளி வாக்குச்வாடியில் நடிகர் டி.ராஜேந்தர் தனது வாக்கை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியலில் எம்ஜிஆர் கொடி நாட்டிவிட்டு சென்றதால் திரைத்துறையினர் என்றாலே அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர். தலைவர்களுக்கு வைத்துவிட்டோம் சிலை.  அவர்களுடைய கொள்கைகளுக்கு வைத்துவிட்டோம் உலை. ஓட்டுக்கு பேசுகிறார்கள் விலை. ஓட்டுக்காக வீசுகிறார்கள் வலை.  எந்த கட்சிக்கும் வீசவில்லை அலை. இதுதான்  உண்மை நிலை. ஓட்டுப் போடுவது டாஸ்க். முகத்தில்  போட்டு வந்தேன் மாஸ்க். மக்கள் ஜனநாயகக் கடமையற்ற  வேண்டும். நடிகர் சிம்பு படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வருவது சிரமம். எனவும்  டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

1:21 PM IST:

திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அம்சா என்ற பெண் ஆம்புலன்சில் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

1:21 PM IST:

தர்மபுரி பொம்மிடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பேருந்து ஒட்டுனர் பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு தனது ஜனநாயக கடைமையையாற்றினர்.

1:18 PM IST:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு விவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார். அப்போது, அங்கு கூடியிருந்த கேமரா மேன்களை வெளியேற்றினால் தான் ஓட்டு போடுவேன் கமல்  கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

1:05 PM IST:

திருவாரூர் நகராட்சி உட்பட்ட தெற்கு வீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்களுடைய செல்ே பானில் டார்ச் லைட்டை அடித்து மக்கள் ஜனநாயக கடமையற்ற உதவினர். சுமார் 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது. 

1:02 PM IST:

சென்னை மாநகராட்சி தேர்தலில் இதுவரை பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. அமைதியாக வாக்குபதிவு நடைபெறுகிறது. 
வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். 
 
1:00 PM IST:

திருவண்ணாமலை சண்முகா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரியான முறையில் தேர்தல் நடத்தவில்லை என்று கூறி, எதிரே உள்ள நெடுஞ்சாலையில் அனைத்து கட்சியை சார்ந்த வேட்பாளர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:57 PM IST:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி தனது வாக்கை பதிவு செய்ததாக முத்துலட்சுமி என்ற பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12:55 PM IST:

தமிழ்நாட்டில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி மிகக்குறைந்த சதவீதம் வாக்குப்பதிவு நடந்த மாநகராட்சியாக செங்கல்பட்டு உள்ளது. குறைந்தபட்சம்10.65 சதவீதம் வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது. அதேபோல், பேரூராட்சியில் 26,54 சவீதமும், நகராட்சியில் 16.77 சதவீதம் பதிவாகியுள்ளது.

12:48 PM IST:

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணிநேர நிலவரப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் விவரம் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் 17.93 சதவீதம், நகராட்சிகளில் 24.53 சதவீதம், பேரூராட்சிகளில் 28.42 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 21.69 சதவீத வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர்.

12:34 PM IST:

நகர்ப்புற உள்ளட்சி தேர்தலில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார்.

12:27 PM IST:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். ஆளும் கட்சியோ ஆண்ட கட்சி ,  மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும் பணம் கொலுசு,டிபன் பாக்ஸில்  மூக்குத்தி வைத்து  வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். நியாயமாக தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் வாக்களிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

11:59 AM IST:

 மதுரை மேலூர் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும் என  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

11:58 AM IST:

நகர்ப்புற உள்ளட்சி தேர்தலில் சென்னை அடையாறில் உள்ள தமோதரபுரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சவாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதை காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களிடம் இருந்து ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்த பணம் தேர்தலின் போது மக்களிடமே போய் சேருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

12:01 PM IST:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி காரில் சசிகலா தியாகராயநகரில் உள்ள வித்யோதவா பள்ளி வாக்குச்வாடியில் தனது வாக்கை பதிவு செயதார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எப்போதும் அம்மாவுடன் வாக்களித்த நான் இம்முறை தனியாக வந்து வாக்களித்துள்ளேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் . அராஜம் செய்யக் கூடாது என்றார்.

11:43 AM IST:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனான தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி இருவரும் பெரியகுளம் பகுதியில் வாக்களித்தனர்.

11:42 AM IST:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி காரில் வாக்களிக்க சசிகலா வருகை தந்துள்ளார். இவரது வருகையையொட்டி வாக்குச்சவாடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

11:29 AM IST:

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிநேர நிலவரப்படி மாநகராசடி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் விவரம் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால், அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து, அவர்கள் ஓட்டளிக்க நேரம் கடந்தாலும், அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் குறைவான வாக்கு பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இனிமேல் சூடுபிடிக்கும் என நம்புகிறேன். இப்போது சென்னையில் வாக்காளர்கள் வரத்தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது என்றார். 

11:23 AM IST:

சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, செந்தாமரை ஆகியோர் வாக்களித்தனர்.

11:00 AM IST:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தான் வாக்களிப்பேன் என கடந்த 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த மகேந்திரன் என்பவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக தனது வாக்கினை பதிவு செய்தார்.

10:47 AM IST:

மதுரை ஐயர் பங்களா சேவியர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வணிகம் மற்றம் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுகவினர் வாக்களிக்க பரிசுப் பொருட்கள், பணம் கொடுத்தாலும் முதலமைச்சர் மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களால் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

10:37 AM IST:

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

10:33 AM IST:

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டுகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் - 11.03%, கடலூர் - 10.11%, தி.மலை - 18.5%, விருதுநகர் - 8.9%, ராமநாதபுரம் - 8.88%, தஞ்சை - 6.1%, புதுக்கோட்டை - 11%, சேலம் - 12.97%, தேனி - 12% பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

10:29 AM IST:

சென்னை ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் யாருக்கும் ஆதரவு கிடையாது. தோற்றாலும் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

10:26 AM IST:

சேலம் மாநகராட்சி குகை மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் திமுகவினர் வாக்கு கேட்பதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிமுக வேட்பாளர் தங்கதாமரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

10:24 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன்  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஜெயேந்திரா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களை நம்பி நாங்கள் களத்தில் நிற்கிறோம். அதிமுக பணம் கொடுத்ததாக செய்தி வரவில்லை தனித்து களம் காணும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். காலையில் இருந்து தற்போது வரை அமைதியாக தேர்தல் நடைபெறுகிறது. போகப்போகத்தான் எவ்வாறு நடைபெறும் என்பது தெரியவரும்.

10:19 AM IST:

சிவகங்கையில் நகை மதிப்பீட்டாளர் மகேஷ்பாபு என்பவர் அரை நிர்வாணத்துடன்  வாக்களிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அரை நிர்வாணத்துடன் வாக்களிக்க வந்தவரை  போலீசார் தடுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. பணிநிரந்தர கோரிக்கையை முன்வைத்து அவர் அவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது. 

10:21 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும். வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கோவையில் ராணுவம் பாதுகாப்புக்கு வரும் அளவிற்கு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை.

9:43 AM IST:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் 
குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கிறார். 

9:37 AM IST:

திருச்சி மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள  வெஸ்ட்டரி மேல்நிலைப்பள்ளி   வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஆனதால் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காத்திருக்கின்றார். 

9:35 AM IST:

சென்னை ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார்.

9:31 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மந்தைவெளில் பாஜக செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எனக்கு இன்று தேர்தல் மாதிரி தெரியவில்லை. தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

9:26 AM IST:

மதுரை பசுமலையில் வாக்காளர்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க திமுகவினர் வற்புறுத்துவதாக அதிமுகவினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால், அதிமுகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

9:22 AM IST:

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9:16 AM IST:

சென்னை திருவான்மியூர் 179வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை போட்டுவிட்டு அதிமுகவினர் தப்பிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

9:09 AM IST:

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி கதிர்ஆனந்த் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

9:08 AM IST:

கரூர் மாநகராட்சியில் 38 வார்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

9:04 AM IST:

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் தள்ளாடும் வயதிலும் வந்து தனது ஜனநாயக கடமையை மூதாட்டி ராமாயி ஆற்றினார். 

9:00 AM IST:

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில்  கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோவை அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதால், அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஏதாவது தில்லுமுல்லு செய்ய திமுக முயல்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

8:55 AM IST:

பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

8:50 AM IST:

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சூர்யாவை ஏடிஎஸ்பி கணேஷ் சாந்தா தாக்கியதாக குற்றச்சாட்ட எழுந்துள்ளது.  காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:48 AM IST:

ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் வீல்சேர் இல்லாததால் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

8:44 AM IST:

நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி வார்டு 16ல், திருச்சி 58வது வார்டு, கடலூர் மாநகராட்சி 5வது வார்டில் வாக்குச்சவாடியில் இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

8:25 AM IST:

விழுப்புரம் நகராட்சியில் 18வது வார்டில் ஓட்டேரியில் சசிரேகா பிரபு அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் குடும்பத்துடன் வந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நிச்சயமாக விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் திமுக மாபெரும் வெற்றி அடையும். அதேபோல், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மாபெரும் வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8:15 AM IST:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

8:11 AM IST:

கடலூர் மாநகராட்சி 5வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்.

8:08 AM IST:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ககன்தீப் சிங் பேடி;-  அனைவரும் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும்; வாக்கு பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

8:05 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவெறும்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு செலுத்தினார்.

8:04 AM IST:

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்ய நடிகர் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டார். 

8:03 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 

8:00 AM IST:

திருச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோவையில் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

7:53 AM IST:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

7:46 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள  பத்ம சேஷாத்ரி பள்ளியில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

7:41 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை விருகம்பாக்கத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்.

7:52 AM IST:

உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 192 வார்டில் நடிகர் விஜய் வாக்கை செலுத்தினார்.

தமிழகத்தில் நகர்ப்புற சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்தார். நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

7:33 AM IST:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 192 வார்டில் நடிகர் விஜய் வாக்கை செலுத்துகிறார். சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த உள்ளார். நடிகர் விஜய் வருகையை ஒட்டி வாக்குச்சவாடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

7:24 AM IST:

கொடைக்கானலில் பாஜக பெண் வேட்பாளரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் 4வது வார்டில் ஜான்சி கமலா பாய் என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவரது கணவர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேர்தல் நடைபெற்றிக்கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியு[ள்ளது.

7:09 AM IST:

உத்தமபாளையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த இறைச்சியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

7:06 AM IST:

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 1374
போட்டியின்றி தேர்வானவர்கள்: 4 
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 3843
போட்டியின்றி தேர்வானவர்கள்: 18
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டுகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமாக  12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி: 

மொத்த பதவியிடங்கள்: 7609
போட்டியின்றி தேர்வானவர்கள்:196 
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660

மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர்.

7:00 AM IST:

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

6:53 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று காலை 7 முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

6:47 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று காலை 7 முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் பாதுகாப்பாக வந்து வாக்களித்துச் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிம அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அனு மதித்துள்ள 11 வகையான ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

6:41 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 முதல் நடப்பதால் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய கூடுதல் ஊழியர்களை தமிழக மின் வாரியம் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

6:32 AM IST:

இன்று நடைபெற உள்ள நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாக்களிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கவிருக்கிறார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் இதே வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்ந்தரராஜன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் வாக்களிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் அவர் காலை 7 மணிக்கு வாக்களித்துவிட்டு உடனடியாக ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு திருவள்ளுவர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார். முன்னாள் முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான‌ ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள பிரம்மஞானம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள‌ பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் திண்டிவனம் நகராட்சி 19-வது வார்டில் உள்ள‌ ரொட்டிக்கார தெரு தாகூர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சி 7-வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டார். 

6:21 AM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும், 1,42,45,637 பெண் வாக்காளர்களும், 4,325 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் மாநகராட்சியில் மட்டும் 1,54,84,607 பேரும், நகராட்சிகளில் 64,92,735 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 59,79,412 பேர் வாக்களிக்க உள்ளனர். சென்னையில் மட்டும் 61,18,734 வாக்காளர்கள் உள்ளனர்.

11:11 PM IST:

கோவையில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

5:15 PM IST:

கோவையில் போலீஸ் துணையுடன் அனைத்து வார்டுகளிலும் பண விநியோகம் நடப்பதாகவும் அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக இதுபோன்ற செயலில் ஈடுபடுப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் வெளியூரை சேர்ந்தவர்கள் இங்கேயே தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

4:05 PM IST:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்ற நிலையில் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

2:13 PM IST:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56 வது வார்டு கருமண்டபம் பகுதியில் தீப்பட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் கவிதா பெருமாள் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர் கவிதா பெருமாளின் ஆதரவாளர்களான சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மாந்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்த பொழுது, ஓட்டுக்கு எதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொது மக்களை கூடி நால்வரையும் துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடினர். இதில் சக்திவேல், ரபிக், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரையும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

"

மேலும் சுயேட்சை வேட்பாளர் ஆயிரம் ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்ததால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திமுக, அதிமுக கட்சியினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்குமார் புகாரைப் பெற்றுக்கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால் போராட்டத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டனர்.

1:50 PM IST:

"அதிமுகவினர் மீது வேண்டுமென்றே வழக்கு போடப்படுகிறது. 3 முறை மனு அளித்தும் கோவையிலிருந்து குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. பயமாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் என அனைவரையும் கோவை மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டும். கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த துணை ராணுவப் படை பாதுகாப்பு வேண்டும்." - எஸ்.பி.வேலுமணி.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

12:51 PM IST:

திருச்சி மாநகராட்சி 29வது வார்டில்  திமுக சார்பில் போட்டியிடும் கமல் முஸ்தஃபாவுக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. திமுக வட்ட பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர் முஸ்தபா ஆகியோர் அந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வாக்காளர்களின் பூத் ஸ்லிப்புகளை வாங்கி குறித்துக்கொண்டு, ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது

வாக்காளர்களுக்கு பணம்.. தொக்கா சிக்கிய திமுக.? வீடியோ வெளியானதால் திருச்சியில் பரபரப்பு.. pic.twitter.com/PFADSJnmdZ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:01 PM IST:

நாளை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை உள்பட 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சிகளுக்க்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 12,500 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 57,770 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

11:40 AM IST:

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார் வேட்பாளர் ஒருவர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் 9 வது வார்டு அதிமுக வேட்பாளர் கீதா சுப்பிரமணியன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக.வில் ஐக்கியமாகி ஷாக் கொடுத்துள்ளார்.