வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை பிற சாதிகளுக்கும் பகிர்ந்தளிக்க உத்தரவு!

By manimegalai aFirst Published Oct 26, 2021, 3:53 PM IST
Highlights

பலகட்ட போராட்டங்களுக்கு எம்.பி.சி. பிரிவில் உள்ள இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு என தனியாக 10.5% உள் ஒதுக்கீட்டை வன்னியர்கள் பெற்றுள்ளனர்.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு எம்.பி.சி. பிரிவில் உள்ள இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு என தனியாக 10.5% உள் ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்து, பல உயிர்களை பலிகொடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவான எம்.பி.சி.-க்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு பெறப்பட்டது. இதற்கு பெரும் போராட்டங்களை முன்னெடுத்த வன்னியர்களுக்கு அதன் பலன் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குமுறல் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. எம்.பி.சி. பிரிவில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களுக்கு போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை என்று கூறிவந்த பா.ம.க. வன்னியர்களுக்கு என உள் ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தது.

நீண்ட கால போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் வன்னியர்களுக்கு கல்வி வேலை மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதும், நீதிமன்றங்களும் இச்சட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. ஒரே ஒரு சாதிக்கு 10.% இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, மற்ற 68 சாதிகளுக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என வழங்கியதை ஏற்கமுடியாது என தென்மாவட்டங்களில் குமுறல்கள் இருந்து வருகின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் மாற்றப்படவில்லை. மாறாக 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தான் தென் மாவட்டங்களில் வன்னியர்க்ளுக்கான இட ஒதுக்கீட்டில் சேர ஒருவர் கூட இல்லாதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை சரிசெய்ய புதிய முடிவை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு அரசு, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்ப உயர்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிட அனுமதி வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணையும் அரசிதழில் வெளியாகியிருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களை வன்னியர்களை கொண்டு நிரப்பலாம் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. உள்ளிட்ட வன்னியர் அமைப்புகள் போராடி பெற்ற உள் இட ஒதுக்கீடு மீண்டும் கூட்டாஞ்சோறு ஆக்கப்பட்டிருப்பது அச்சமூக மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

click me!