டீ வாலா மகன் பிரதமர்... விவசாயி மகன் முதல்வர்... செம்ம காம்பினேஷன்...!! களைகட்டும் டூர் பிளான்... வயிற்றெரிச்சல் அரசியல்...!!

By Asianet TamilFirst Published Sep 10, 2019, 2:23 PM IST
Highlights

வரலாறு காணாத அளவிற்கு நிதி நெருக்கடி நிலவுகிறது,  மக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லை , தொழிற்சாலைகள்  மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 

பிரதமர் மோடி அவர்களை காப்பியடித்துத்தான் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் என்று நாடாளுமன்ற உறுபினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அப்போது தொடர்ந்து பேசிய அவர்.

சந்திராயன்-2 பொருத்தவரையில் விக்ரம் லேண்டர்  இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதனை மீண்டும் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அக்குழுவினருக்கு இது தோல்வியல்ல தொடர் முயற்சி என்றார். ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டதிலிருந்து பல்வேறு கட்டங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கர்நாடக மாநிலத்தை பொருத்தவரையில் டி கே சிவகுமார் அங்கு மாநில மந்திரியாக இருந்தவர் அதனால் பெரிய அளவில் அங்கு போராட்டம் நடந்தது அதே போல் தமிழகத்திலும் சிதம்பரத்திற்காக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது என்றார்

100 நாள் மோடியின் ஆட்சி படுதோல்வி கண்டுள்ளது. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.  முதல் ஐந்து ஆண்டு தோல்வியே தற்போதும் தொடர்கிறது.  அரசின் மோசமான கொள்கைகளின் மூலமாக நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது,  வரலாறு காணாத அளவிற்கு நிதி நெருக்கடி நிலவுகிறது,  மக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லை. 

தொழிற்சாலைகள்  மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.  வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்க நேரிடும் சுழல் ஏற்பட்டுள்ளது. மோடி வெளிநாட்டில் மட்டுமே இருக்கிறார் அந்த பழக்க தோஷத்தில்தான் என்னவோ நம் தமிழ்நாட்டு முதலமைச்சரும் மந்திரிகளும் வெளிநாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.  ரஜினிகாந்த் பிஜேபியில்  மட்டுமல்லாமல் எந்த கட்சியிலும் அவர் சேர மாட்டார். எந்த தலைமையின் கீழும் இருந்த அவர் வேலை செய்ய மாட்டார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

click me!