பாஜக தவைரை நியமிப்பதில் பெருங்குழப்பம் ! அமித்ஷாவின் அதிரடி ஐடியா என்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Sep 3, 2019, 7:18 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழசை தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதைடுத்து புதிய தலைவருக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத்தை  வடக்கு தெற்கு என இரண்டாக பிரித்து இரண்டு தலைவர்களை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக  தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைவர் பதவியை கைப்பற்ற, அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பாஜக, வடக்கு, தெற்கு என, இரு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது. 

தமிழகத்தில், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, தமிழிசைக்கு கவர்னர் பதவி அளிக்கப்பட்டு உள்ளதால், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. 

தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்து விட்டதால், மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் பார்வை, தற்போது, தமிழக பாஜக தலைவர் மீது திரும்பியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா,வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் போன்ற தமிழக பாஜக தலைவர்கள் தலைவர் ரேஸில் உள்ளனர்.


அதே நேரத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்சியை புதிய பாதையில் திருப்பி விட வேண்டும் என்ற எண்ணமும், மேலிடத்திற்கு இருக்கிறது. எனவே, தமிழக பா.ஜ.,வை வடக்கு, தெற்கு என, இரண்டு மண்டலமாக பிரித்து, புதிய தலைவர்களை நியமிக்கலாமா என, ஆலோசிக்கப்படுகிறது.

இல்லையென்றால்  தமிழக காங்கிரஸ் பாணியில், ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஐந்து செயல் தலைவர்களை நியமிக்கலாமா என்பது குறித்தும், பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது.

click me!