மம்தாவுக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்... மேற்கு வங்காளத்தில் முகம் சிவக்கும் பாஜக!

By Asianet TamilFirst Published Jun 2, 2019, 7:53 AM IST
Highlights

தேர்தல் பிரசாரத்தில் நடந்ததைப் போலவே தற்போதும் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் மம்தாவைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். 
 

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதிய கடிதங்களை லட்சக்கணக்கில் அனுப்ப பாஜக முடிவு செய்துள்ளது. 
தேர்தல் பிரசாரத்தின்போது காரில் சென்றுகொண்டிருந்த மம்தா பானர்ஜியைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று பாஜக தொண்டர்கள் கோஷம் போட்டார்கள். காரை நிறுத்திய மம்தா பானர்ஜி, கோஷம் எழுப்பியவர்களைப் பார்த்து சத்தம் போட்டார். அவர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இந்த விவகாரம் அடங்கிய வீடியோ காட்சி சமூக ஊடங்களில் வைரல் ஆனது. இந்த விவகாரத்தை பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது! 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் மம்தா பானர்ஜி காரில் சென்றுகொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தில் நடந்ததைப் போலவே தற்போதும் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் மம்தாவைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

 
இதற்கிடையே வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில  ஜோதி பிரியா மாலிக், தாபோஸ் ராய் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் சென்ற பிறகு அங்கே வந்த பாஜக நிர்வாகிகள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் போட்டார்கள். இதனால் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற எழுதிய தபால் கார்டுகளை லட்சக்கணக்கில் அனுப்ப பாஜக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக மேற்கு வங்க பாஜக எம்பி அர்ஜூன் சிங் கூறுகையில், “10 லட்சம் தபால் கார்டுகளில்  ஜெய் ஸ்ரீராம் என எழுதி முதல்வர் மம்தா பானர்ஜியின் அலுவலக முகவரிக்கு அனுப்ப இருக்கிறோம்” என்று தெரிவித்தார். 

click me!