பதற்றத்தில் உளரும் துரைமுருகன்! செம கடுப்பில் ஸ்டாலின்!

By Selva KathirFirst Published May 7, 2019, 11:57 AM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே மேடைகளில் நிதானம் இழந்து திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி வருவதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சிறிதுகூட ரசிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

கடந்த சில நாட்களாகவே மேடைகளில் நிதானம் இழந்து திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி வருவதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சிறிதுகூட ரசிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

காட்பாடியில் கோடி கோடியாக பணம் சிக்கியது விவகாரத்திலிருந்து ஸ்டாலின் துரைமுருகன் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. வேலூரில் தேர்தல் ரத்தானதுள் இந்த விரிசல் அதிகமானது. இருவரும் முன்பைப் போல் பேசிக் கொள்வதில்லை என்றும் கட்சியின் நிர்வாகம் தொடர்பாக மட்டுமே பரஸ்பரம் பேசிக் கொள்வதாகவும் அறிவாலய தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சூலூரில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் துரைமுருகனுக்கு இந்தப் பேச்சை ஸ்டாலின் தரப்பு சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். ஒருவேளை 25 நாட்களில் ஆட்சி மாறி விட்டது என்றால் அதற்கான கிரெடிட் துரைமுருகனுக்கு போவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஸ்டாலின் தரப்பு கருதுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வழக்கம்போல் செம காமெடியாக துரைமுருகன் பேசி வந்தார். திமுக தலைவர் ஸ்டாலினையும் அவரது திறனையும் மிகவும் புகழ்ந்து தள்ளினார் துரைமுருகன். ஒரு கட்டத்தில் நிதானமிழந்த துரைமுருகன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் தகுதி கூட ஸ்டாலினுக்கு இருப்பதாக பேசிவிட்டார். ஒரு படத்தில் லிவிங்ஸ்டன் ஐப் பார்த்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று முழக்கமிடுவார்கள். அந்த காட்சியுடன் தற்போது துரைமுருகனை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகிறது அதிமுக தரப்பு.

துரைமுருகன் என்னமோ சீரியஸாக பேசினாலும் அது மிகவும் காமெடியாக போகிவிட்டது. இதுவும் ஸ்டாலினுக்கு அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் சட்டை பயன்படுத்தி துரைமுருகனிடம் இருந்து பொருளாளர் பதவியை பறிக்க ஒரு பக்கா பிளான் ரெடி செய்து வருகிறாராம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி மு க வி ஐ பி ஒருவர்.

click me!