கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்கன்னு சொன்னது இவங்கள இல்லயாம்... அவங்களயாம்! ரகசியத்தை சொன்ன துக்ளக் கார்ட்டூனிஸ்ட்...

By sathish kFirst Published Jun 10, 2019, 11:49 AM IST
Highlights

நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருந்தது துக்ளக், அதிமுகவை இல்லை என துக்ளக் கார்ட்டூனிஸ்ட் கூறியுள்ளார்.

நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருந்தது துக்ளக், அதிமுகவை இல்லை என துக்ளக் கார்ட்டூனிஸ்ட் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி துக்ளக் இதழில் 9 ஆம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் அதிமுகவினரை மட்டுமல்ல தமிழகத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. 

நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருந்தது துக்ளக். அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருந்தது.

இந்த நிலையில் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா.  குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துவருகிறது. சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளேல்லாம் பெட்டிகடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் கடந்து போவதே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என்றும் காட்டமாக பதிலளித்தது.

இதுகுறித்து பேசிய துக்ளக் பத்திரிகையின் கார்ட்டூனிஸ்டிட்; முதலில் வரைந்த கார்ட்டூன் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளே விருந்து சாப்பிடுவதுபோலவும், வெளியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும்,  பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் காத்திருப்பது போலவும், கொஞ்சம் தூரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் நிற்பதுபோல்தான்  இருந்திருக்கிறது.

அந்த கார்ட்டூனைப் பார்த்த  குருமூர்த்தி, இது பிஜேபியை இழிவாகச் சித்திரித்தது போல இருக்கிறது. தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த சமூகத்துக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும். எனவே இருவரையும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் எடப்பாடி, பன்னீர் இருப்பது போல செய்துவிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று அப்படி வைக்கச் சொல்லிவிட்டாராம். 

என்ன ஒரு டெக்னீக்?

click me!