சசிகலா குறி வைக்கும் அந்த 3 தொகுதிகள்... ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸுக்கு செக்..!

Published : Jul 01, 2021, 04:41 PM IST
சசிகலா குறி வைக்கும் அந்த 3 தொகுதிகள்... ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸுக்கு செக்..!

சுருக்கம்

 தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம். இந்தத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறாராம் சசிகலா. ஆகையால் அதிமுகவினர் ஒருவித கலக்கத்துடனேயே இருக்கின்றனர். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுகவுக்குப் பொதுச் செயலராக சசிகலா தொடர வேண்டும். சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள், கிளை, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக சிலபேரை மட்டும் கூட்டி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

அதிமுக ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக சசிகலாவுடன் உரையாடிவரும் அதிமுக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு  நீக்கி வருவதைக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலா அவர்கள், மாவட்டந்தோறும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, தொண்டர்களைச் சந்தித்து, தொண்டர்களின் கட்சிதான் அதிமுக என்பதை வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்துகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது சசிகலா தரப்பிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. தொண்டர்களிடம் இருந்துவரும் கடிதங்களைப் படிக்கவும், அவர்களுடன் செல்ஃபோனில் பேசுவதற்காகவும் ஒரு அறையை ஒதுக்கியுள்ளார். காலைமுதல் இரவுவரை இந்த அலுவலகம் இயங்குகிறது. காலை உணவு அருந்திய பின்னர் சசிகலா இந்த அறைக்கு வந்து கடிதங்களைப் படிப்பது, தொண்டர்களிடம் பேசுவது என சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் வெற்றிபெற்ற தேனி மற்றும் போடி தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம். இதேபோல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம். இந்தத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறாராம் சசிகலா. ஆகையால் அதிமுகவினர் ஒருவித கலக்கத்துடனேயே இருக்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?