கணவனுக்கு துரோகம் செய்தால் இதுதான் கதி.. பிக்னிக் அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்த கள்ள காதலன்.

Published : Mar 22, 2022, 10:52 AM ISTUpdated : Mar 22, 2022, 10:58 AM IST
கணவனுக்கு துரோகம் செய்தால் இதுதான் கதி.. பிக்னிக் அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்த கள்ள காதலன்.

சுருக்கம்

இதைத் தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் வேறொருவர் மனைவியை காதலிப்பது போல் நடித்து பிக்னிக் அழைத்து சென்று அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது,  ஷதாப் உஸ்மான் (27) என்ற நபருக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது

கள்ளக்காதலியை பிக்னிக்  அழைத்துச் சென்று தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல நடித்து பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தல், காதலிக்கும் மறுக்கப் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசியது,  நகைக்கான பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுவது போன்ற மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் வேறொருவர் மனைவியை காதலிப்பது போல் நடித்து பிக்னிக் அழைத்து சென்று அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது,  ஷதாப் உஸ்மான் (27) என்ற நபருக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். இவர்களுக்கு இடையில் கடந்த சில வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஷதாப் உஸ்மான் அந்தப் பெண்ணை ஷாடோல் மாவட்டத்தில் உள்ள க்ஷிர் சாகர்  என்ற இடத்திற்கு பிகினிக் என்ற பெயரில் அழைத்து சென்றார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி  உஸ்மான் நண்பர்கள் ராஜேஷ் சிங், சோனு ஜார்ஜ் ஆகியோரும் அங்கு வந்தனர்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். அந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்னரை போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, அப்போது அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 

அதேபோல் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பாணத்தை அந்த பெண் குடித்திருந்ததாகவும் கூறினர். இந்நிலையில் போலீசார் இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு