இதுதானா திமுகவின் சமூக நீதி... இதுதான் நீங்கள் சாதியை ஒழித்த லட்சணமா??? டரியல் ஆகும் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2020, 1:18 PM IST
Highlights

ஒரு ஊராட்சி மன்ற தலைவர் என்றும் பாராமல் ஆதிக்க மனப்பான்மையுடன் ஒன்றிய செயலாளர் நடந்து கொண்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவரால் திட்டை ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே திமுகவைச் சேர்ந்த சாதி வெறிபடித்த ஒன்றி செயலாளரால் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாதி ஒழிப்பு, சமூக நீதி என கோஷம் போட்டுவந்த திமுகவின் சாதி ஒழிப்பு வேஷம் மெல்ல கலையத்தொடங்கியுள்ளது. பட்டியலின மக்கள் இழிவு செய்யப்படும் பெரும்பாலான  இதுபோன்ற சாதி ஆணவ குற்றப் பின்னணிகளில் அதிக அளவில்  திமுக கட்சியினரே இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி, இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர், அதே பஞ்சாயத்தில் திமுக சார்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருப்பவர் மோகன்ராஜ், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவரான மோகன், தான் உயர் சாதிக்காரர் என்பதாலும், தனக்குள்ள சாதி வெறியாளும், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும் ஊராட்சி மன்றக்  கூட்டங்களில் இருக்கையில் அமரவிடாமல், தரையில் அமர வைத்து அவமரியாதை செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல்  ரஜேஸ்வரி தேசியக்கொடி ஏற்ற கூடாது எனவும் உத்தரவிட்டு ஒட்டுமொத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் மோகன்ராஜ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஸ்வரியை எந்த பணியும் செய்யவிடாமல் மோகன் தடுத்து அவமானப்படுத்தி வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவியை ஆதிக்க சாதிவெறி மனப்பான்மையுடன் நடத்திய துணைத் தலைவர் மோகன்ராஜ் திமுக ஊராட்சி துணைத் தலைவர் என்பது மெல்ல பட்டவெளிச்சமாகி உள்ளது, ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர், இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற ஜாதி கொடுமைகளை எதிர்த்தே பெரியார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் போராடியதாகவும், திமுக அதே பணியை தொடர்ந்து செய்து வருகிறது எனவும் கூறினர். ஆனால் தற்போது நடந்த இந்த சாதிக் கொடுமைக்கு தனது கட்சிக்காரர் தான் காரணம் என்பதை மட்டும் கூறாமல் மறைந்து விட்டனர். ஆனால் இதுகுறித்து வாய்திறக்காத திமுக சம்பவத்தை  மட்டும் கண்டித்து பிரச்சினையிலிருந்து நழுவிக்கொண்டுள்ளது. 

திட்டை ஊராட்சி சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் இதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட திமுகவினரின் சாதி வெறி கொடுமை கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. சாதி ஆதிக்க மனப்பான்மை கொண்ட கொடுமுடி திமுக ஒன்றிய கழக செயலாளர் சின்னசாமி என்பவர், தனது கட்சியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்த இச்சிபாளையம் ஊராட்சி மன்ற  தலைவர் ராஜ்குமார் என்பவரை அவமரியாதை செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் சின்னசாமி இருக்கையில் அதிக்க வெறியோடு அமர்ந்திருக்க தனது கட்சியைச் சேர்ந்த இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அவரின் காலடியில், தரையில் அமர்ந்தபடி உள்ளார். ஒரு ஊராட்சி மன்ற தலைவர் என்றும் பாராமல் ஆதிக்க மனப்பான்மையுடன் ஒன்றிய செயலாளர் நடந்து கொண்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக நீதி, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என முழங்கிய திமுக தற்போது சாதி என்னும் சாக்கடையில் மொத்த உருவமாக மாறி உள்ளது எனவும், சமூகநீதியை  மையமாகக்கொண்டு துவக்கப்பட்ட திமுகவில் சாதி  அடிப்படையிலேயே பதவிகளும், பொறுப்புகளும் வழங்கப்படுகிறது! இதுவே அத்தனைக்கும் காரணம் எனவும், எந்த சாதி ஒழிப்புக்காக உருவாக்கப்பட்டதோ அந்த திமுகவில் கொடிய சாதி வெறி ஆதிக்க மனப்பான்மை மண்டிக் கிடக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. வெளியில் சமூக நீதி பேசும் திமுவினர் உள்ளே சாதி கட்டமைப்பை சிதையாமல் பார்த்துக் கொள்ளுவதில் கவனமாக இருந்து வருகின்றனர் என்பதற்கு இதுவே உதாரணம் என நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுகவில் எங்கெல்லாம் உயர் சாதியினர் பொறுப்புகளில் உள்ளனரோ அந்த இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பட்டியல் இன மக்கள் அதே சாதி  இழிவோடு அவமரியாதை செய்யப்படும் கொடுமைகள் அரங்கேறிவருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. பெரியார், அண்ணா என பேசும் திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி போன்றோர்  மற்றவர்களுக்கு சாதிக் கொடுமை குறித்து பாடம் எடுப்பதற்கு முன்னர் தங்கள் கட்சியில் உள்ள சாதிக் கொடுமையை கண்டு கலைய வேண்டும் என ஆதங்க குரல்கள் எழுகின்றன.

 

click me!