திருவாரூரில் திடீர் திருப்பம்... அதிமுகவால் பின்வாங்கும் அன்புமணி..!

By vinoth kumarFirst Published Jan 3, 2019, 2:59 PM IST
Highlights

கோவையில் நடைபெற்ற பாமக செயற்குழுவில் 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அன்புமணி அறிவித்த பிறகு வெளியான, திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அன்புமணி மெளனம் காத்து வருகிறார்.

கோவையில் நடைபெற்ற பாமக செயற்குழுவில் 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அன்புமணி அறிவித்த பிறகு வெளியான, திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அன்புமணி மெளனம் காத்து வருகிறார்.

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்தவுடனே கட்சிகள் பரபரப்பாகிவிட்டன. வேட்பாளர் தேர்வில் முக்கிய கட்சிகள் மூழ்கியிருக்கின்றன. பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. அண்மையில் கோவையில் பாமக செயற்குழு நடந்தபோது, அதில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, “2010-ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. 20 தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும். இதில் 11 தொகுதிகளின் வெற்றியை பாமக நிர்ணயிக்கும்” என்று பேசினார். 

2010-ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பாமக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்தி திமுக வெற்றி பெற்றதாக அப்போது பாமக புகார் கூறியது. தமிழக இடைத்தேர்தல் அணுகுமுறை காராணமாக இனி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.  

இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாமக போட்டியிடவில்லை. ஆனால், செயற்குழுவில் அன்புமணி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததால், பாமகவின் மனமாற்றத்தை அக்கட்சித் தொண்டர்கள் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பாமக தங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

 

அன்புமணி அறிவித்தபடி திருவாரூர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாமக முகாமில் எந்த ஆலோசனையும் இதுவரை நடக்கவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரக்கூடும் என்று கூறப்படும் நிலையில், அதற்கேற்ப இந்த இடைத்தேர்தலில் நிற்காமல் பாமக ஒதுங்க நினைக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படி இருந்தாலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்த பிறகு, ஏன் இந்த மெளனம் என்பது அன்புமணிக்கே வெளிச்சம்.

click me!