திருமாவளவனின் திமுக அடிமை தனம்... திராவிட அரசியல் முரண்பாடுகளை புட்டுப்புட்டு வைத்த ஹெச்.ராஜா..!

Published : May 18, 2020, 02:08 PM IST
திருமாவளவனின் திமுக அடிமை தனம்... திராவிட அரசியல் முரண்பாடுகளை புட்டுப்புட்டு வைத்த ஹெச்.ராஜா..!

சுருக்கம்

சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும்தான் திராவிட அரசியல் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பிரதமர் மோடிஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்து கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரி முதல்வரை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனின் திமுக அடிமை தனத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் திமுக கருப்பாடுகள்.

திராவிட அரசியல்... சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும், கர்நாடகாவிடமிருந்து  தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிட மாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான்திராவிட அரசியல்’’எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!