திருமாவளவனை சும்மா விடக்கூடாது... ஜெயில்ல போடுங்க... வெகுண்டெழும் ஹெச்.ராஜா..!

Published : Nov 19, 2019, 11:45 AM ISTUpdated : Nov 19, 2019, 12:44 PM IST
திருமாவளவனை சும்மா விடக்கூடாது... ஜெயில்ல போடுங்க... வெகுண்டெழும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன், கூம்பாக இருந்தால் அது மசூதி, உயர்வாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் எனப்பேசினார். இது பெரும் சர்ச்சையானது. இதனைக் கண்டித்து நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை பரப்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதனைக் கண்டித்து முதல் ஆளாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதல் ஆளாக கருத்துச் சொல்வார் என எதிர்பார்த்தால் அவர் இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை. காரணம், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதில் அவர் பிஸியாக இருந்ததால் கருத்துச் சொல்ல நேரம் இல்லை. 

இப்போது மீண்டும் அரசியல் களத்துக்கு திரும்பியுள்ள அவர் திருமாவளவனை கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ’’இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்’’ எனக் கண்டித்துள்ளார். 

குழந்தை பெற்றுக்கொள்ள தேதி நேரத்தை குறித்து கோபமாக வீடியோ வெளியிட்ட சமந்தா..!

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி