அதிமுக பக்கம் போன பாமக... பீதியிலிருந்து பெருமூச்சு விட்ட திருமா!! கடைசி வரை கலக்கத்திலேயே வைத்திருந்த திமுக!!

By sathish kFirst Published Feb 19, 2019, 11:33 AM IST
Highlights

திமுக, கூட்டணியில், பாமக, இடம் பெற்றால், நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல , 19 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றிக்கும் உதவியாக இருக்கும் என்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க, திமுக, டீல் பேசி வந்ததது ஆனால், பாமகவோ கூட்டணி டீலிங் சரியாக படியாததால் அதிமுக பக்கம் தாவியுள்ளது. பாமகவின் இந்த அதிரடி முடிவால் பல நாட்களாக பீதியிலிருந்த திருமாவளவன் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.  

வரும் லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், அதிமுக, தலைமையில், பிஜேபி, - பாமக, - தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் அடங்கிய, கூட்டணி அமைத்துள்ளது. சற்று முன்பு சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா என்ற ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர். இதற்கு முன்பாக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, அன்புமணி விரும்பவில்லை. திமுக, கூட்டணியில் இடம்பெறவே ஆர்வம் காட்டி வந்தார். ஸ்டாலின், குடும்பத்திற்கு நெருக்கமான டாக்டர் ஒருவரும், அன்புமணியும், மருத்துவ கல்லுாரியில், ஒன்றாக படித்த நண்பர்கள். எனவே, அவர் வாயிலாக, திமுக - பாமக, கூட்டணி பேச்சு நடத்தப்பட்டதாக தகவல் லீக் ஆனது.

இந்த கூட்டணி டிஸ்கஷனில் புதுவை, தர்மபுரி, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம் ஆகிய, 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என, பாமக, தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. திமுக, தரப்பில், புதுவை, தர்மபுரி, சேலம், திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் 6 + 1 தொகுதிகள் கொடுப்பதாகவும் தேர்தல் செலவுகளை பார்த்துக்கொள்வதாகவும் சொல்லப்பட்டதால் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக அணியில் சேர்ந்தது பாமக.

இதற்கிடையில், பாமகவை சேர்க்க, திமுக,வில் உள்ள, இரண்டாம் கட்ட தலைவர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அதில், தென் மண்டலத்திலும், கொங்கு மண்டலத்திலும் தான், திமுக, கூட்டணி பலவீனமாக இருக்கிறது. வட மாவட்டங்களில், பாமக, கூட்டணி இல்லாமல், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், திமுக, வெற்றி பெற்றுள்ளது. எனவே, அந்த தொகுதிகளை, பாமகவிடம், எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்?  என இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆனால், பாமக,வை சேர்த்தால், 19 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், வட மாவட்டங்களில் திமுக, வெற்றி உறுதி என, கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக, ஆட்சியை கவிழ்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால், பாமகவை சேர்த்து கொள்வதே லாபம் என, திமுக, தலைமை நினைத்தது.  திமுக, கூட்டணியில், பாமக சேர்க்க ஸ்டாலினின் மருமகன், துரைமுருகன் போன்றவர்கள் தீவிரமாக முயற்சித்தார்கள்..

ஒருவேளை பாமக திமுக பக்கம் வந்திருந்தால், தயவு தாட்சனையே பாக்காமல் கழட்டி விடப்பட்டிருப்பார் திருமா. கடந்தமுறையைப் போல மநகூ ஆரம்பிக்கவும் முடியாது, பிஜேபி கூடவே இருப்பதால் அதிமுக அணியிலும் இணைய முடியாது. வேறு வழியே இல்லாமல் திமுகவையே நம்பியிருக்கும் கட்டாயத்தில் இருந்த விசிக, ஒருவேளை பாமக திமுக பக்கம் வந்திருந்தால், பாமக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது' என, ஏற்கனவே சொன்னதைப்போல வெளியேறியிருப்பார். தினகரனோடு சேர்ந்திருப்பார். திமுகவோடு நட்பில் இருக்கும் திருமாவளவனை கடைசிவரை பீதியிலேயே வைத்திருந்தார்கள் திமுகவின் மெயின் புள்ளிகள்.

click me!