
சட்டப்பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தொண்டர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது.
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும்.
500 மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.