அன்புமணி வளர்ச்சிக்காக குருவை கொன்றுவிட்டார்கள்.! மீண்டும் குண்டைத் தூக்கிப் போடும் காடுவெட்டி குருவின் சகோதரி

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2021, 3:31 PM IST
Highlights

தேர்தலில் சீட்டு வேண்டும் நோட்டு வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு பிரச்சினை கிளப்பி ராமதாஸ் நாடகமாடுகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான் அவரது இட ஒதுக்கீடு போராட்டம்’’ என்று காடுவெட்டி குருவின் சகோதரி குற்றம் சாட்டி உள்ளார். 

தேர்தலில் சீட்டு வேண்டும் நோட்டு வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு பிரச்சினை கிளப்பி ராமதாஸ் நாடகமாடுகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான் அவரது இட ஒதுக்கீடு போராட்டம்’’ என்று காடுவெட்டி குருவின் சகோதரி குற்றம் சாட்டி உள்ளார். 

இது குறித்து பேசிய அவர், ‘’வன்னியர்கள் பேரைச்சொல்லி வன்னிய இனத்தை அழித்து கொண்டிருக்கிறார் ராமதாஸ். அவரது ராமதாஸ் குடும்பத்திலிருந்து ஒருத்தராவது அடிவாங்கி இருப்பார்களா? அல்லது அவரது குடும்பத்திலிருந்து ஜெயிலுக்கு போய் இருப்பார்களா? எப்படி வந்தது இந்த சொத்து? வன்னியர் இனத்தை காப்பாற்ற வந்தவர்கள் வன்னிய இனத்தை அழிக்க வந்த கும்பல் அது.

இவருக்கும், இவரது மகனுக்கும் வளர்ச்சி இல்லை என்பதால் எனது அண்ணனை மருத்துவமனையில் வைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து கதையை முடித்துவிட்டார்கள். எனது ஒரு முகத்தை மட்டும்தான் பார்த்தீர்கள். இன்னொரு முகத்தை பார்க்கவில்லை என்று எனது அண்ணன் மகன் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துச் சென்று ராமதாசை மிரட்டினார்.

 கொலை செய்வதற்காக ஒரு கட்சி நடத்துகிறார். அந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எனது ராமதாஸ் வன்னிய சமுதாயத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். வன்னிய சமுதாயத்தை வைத்துக் கொண்டு அவரது குடும்பமும் அவரது மகனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் ராமதாஸ் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் வந்தவர்தான் காடுவெட்டி. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். எனது உண்டியல் காசு எடுத்து அவருக்கு கொடுத்து அனுப்பி விட்டேன். அந்த சூழ்நிலையில் இருந்தவர் இன்று பல லட்சம் கோடிக்கு அதிபதி.

அந்த சொத்து எப்படி வந்தது? அது வன்னியர்களின் சொத்து. வன்னியர் பெயரைச் சொல்லி வன்னிய இனத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் சீட்டு வேண்டும் நோட்டு வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு பிரச்சினை கிளப்பி நாடகமாடுகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான் அவரது இட ஒதுக்கீடு போராட்டம்’’ என்று அவர் தெரிவித்தார்.

click me!