
சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்து வருகிறது .
சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளில் கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர் .
கிரீன் வேஸ் சாலையில் உள்ள விஜய பாஸ்கரின் வீடு மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை , புதுக் கோட்டை ராஜ கோபால புரத்தில் உள்ள அலுவலகம் , இழலுப்பூரில் உள்ள அவரது கல்லூரி, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு உள்ளிட்ட 2௦ கும் மேற்பட்ட இடங்களில் வருமனவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் வீட்டு வாசல் முன் நின்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், வருமான வரித்துறையினர் மீது கடும் குற்றம் சாட்டினார்.
நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என, வருமானவரித்துறையினர் கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும், இவ்வளவு நேரம் சோதனை நடத்தியதில், தங்கள் வீட்டில் உள்ள அலமாரி, பீரோ, டேபிள் உள்ளிட்ட அனைத்திலும் சோதனை செய்து பார்த்து விட்டனர்.
ஆனாலும் என் வீட்டில் இருந்து 1௦ ஆயிரம் ரூபாய் கூட கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்தார். அதாவது, தங்கள் வீட்டில் 1௦ ஆயிரம் ரூபாய் கூட ரொக்கமாக வைத்துக்கொள்ளவில்லை என கூறினாரா ? அல்லது வேறு எங்கோ வைத்திருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் “கண்டுபிடிக்கவில்லை” என்ற வார்த்தையை கூறினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.