Sekar Babu: புத்தாண்டு அன்று கோவில்களில் பக்தர்கள் வழிபட தடையா? அமைச்சர் சேகர் பாபு பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 30, 2021, 9:41 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபட தடை விதிக்கப்படுமா என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. 

புத்தாண்டு அன்று கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கோவில்களில் வழிபடலாம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபட தடை விதிக்கப்படுமா என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில் நிலங்களை கண்டறிவது தொடர்பாக வட்டாட்சியர்கள் உடனான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் சேகர் பாபு;- வருவாய்த்துறையுடன் இணைந்து 36 வட்டாட்சியர்களை நியமியத்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். 

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்றார். குறிப்பாக தமிழக அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையான பின்னபற்றப்பட வேண்டும்.ஒமிக்ரான் பரவல் தாக்கம் குறித்து ஆராய்ந்தும், பக்தர்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமலும் கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும். இதுதொடர்பாக 30 மற்றும் 31ம் தேதிகளில் முதல்வர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் முதல்வர் முடிவுகளை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

click me!