உதயநிதி ஸ்டாலின் மீது திருட்டு வழக்கு... அதிரிபுதிரியாகும் அரசியல் களம்..!

Published : Mar 26, 2021, 04:47 PM ISTUpdated : Mar 26, 2021, 04:49 PM IST
உதயநிதி ஸ்டாலின் மீது திருட்டு வழக்கு... அதிரிபுதிரியாகும் அரசியல் களம்..!

சுருக்கம்

செங்கல் திருடியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் புகார் அளித்துள்ளார்.  

செங்கல் திருடியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மதுரை விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்”எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். மேலும் இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கேலி செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,  ‘’மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்க்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கலை திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்துள்ளார்.

 அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். ஆகவே சமூகம் காவல் ஆய்வாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்க்குள்லிருந்து செங்கலை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அதனை விளாத்திக்குளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!