
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பணிகள் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், விசாரித்து வருகிறது.
விசாரணை கமிஷனில் ஆஜரானவர்களில் பலர், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை கமிஷன், சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது.
சசிகலா தரப்பில், புகார் தெரிவித்தவர்கள் விபரம், புகார் விபரம் கேட்கப்பட்டது. மேலும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த, சசி.,வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் அனுமதி கோரி, மனு செய்தார்.
அதனால் விசாரணை செய்தவர்களின் பெயர்களையும் விவரங்களையும் அளிக்க தயார் என விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவர்களிடம் குறுக்கு விசாரனை செய்யவும் சசிகலா தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அதற்கும் விசாரணை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 22 பேரின் வாக்குமூலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை 15 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என்று ஆறுமுகசாமி விசாரணை தெரிவித்துள்ளது.