சூரப்பாவுக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்..!! அண்ணா பல்கலைகழகம் தமிழக மக்களின் சொத்து- AIYF முழக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2020, 11:32 AM IST
Highlights

மருத்துவப்படிப்பில்  இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பறிக்காக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலைகழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக மாநிலம் தழுவிய அளவில் அக்டோபர் 22 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவப்படிப்பில் இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பறிக்காக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  திண்டுக்கல் சிறுமி கலைவாணி பாலியல் கொலைவழக்கை முறையான  சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளுக்கு சாதமாக நடந்து கொண்ட வடமதுரை காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு,  நீதிமன்ற த்தால் விடுதலைசெய்யப்பட  குற்றவாளிக்கும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களுக்கு  தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 22வியாழன் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு காலை11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் AIYF அகில இந்திய பொதுச் செயலாளர், மாநில செயலாளர், மற்றும் மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ள  உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!