வைகோவையே மிஞ்சிய துரை வைகோ.. திமுக ஆட்சி அபாரமாக செயல்படுகிறது என பாராட்டு.

Published : Jun 12, 2021, 10:18 AM ISTUpdated : Jun 12, 2021, 10:20 AM IST
வைகோவையே மிஞ்சிய துரை வைகோ.. திமுக ஆட்சி அபாரமாக செயல்படுகிறது என பாராட்டு.

சுருக்கம்

கொரோனோ பேரிடரில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என வைகோவின் மகன், துரை வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.  ஊராடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அவர் இவ்வாறு கூறினார். 

கொரோனோ பேரிடரில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என வைகோவின் மகன், துரை வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார். ஊராடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அவர் இவ்வாறு கூறினார். வேகமாக பரவி வரும் கொரோனோ நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊராடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. ஊராடங்கின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்துறை நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிமுக உதவ முன்வந்தது. 

 

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி. ஆர்.காலனி பகுதியில் அதிகாலை 6மணியளவில் 1000பேருக்கு தலா ஐந்து கிலோ அரிசி பையினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ வழங்கினார். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று அரசி பையினை வாங்கி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனோ நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உரிய இடத்தில் உரிய அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  ஆரம்பத்தில் படுக்கை பற்றாக்குறை,ஆக்ஸிஜன் பற்றாக்குறை என நிலவி வந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களின் செயல்பாட்டால் நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகருத்துள்ளது. சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டபோது இலவச ஆம்புலன்ஸ் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் தமிழகம் முழுவதும் உள்ள மதிமுகவினர் தொடர்ந்து ஊராடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் என துரை வைகோ தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!