திமுக நம்மை கழட்டிவிட்டால் என்ன செய்வது? ராகுல் - திருமா சந்திப்பின் பரபரப்புப் பின்னணி!

 
Published : May 02, 2018, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
திமுக நம்மை கழட்டிவிட்டால் என்ன செய்வது? ராகுல் - திருமா சந்திப்பின் பரபரப்புப் பின்னணி!

சுருக்கம்

the secret behind thirumavalavan meets rahul gandhi

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என திமுக தலைமை விரும்புகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசு தொடரும்பட்சத்தில் கூட்டணி சாத்தியமில்லை என காங்கிரஸ் மேலிடத்துக்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.  

அதற்கேற்ப மறைமுக நெருக்கடிகளை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான விவாதங்கள் அடிக்கடி சித்தரஞ்சன் சாலையில் நடந்து வருகின்றன. 

கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற திமுக தரும் நெருக்கடிகள் போல் தங்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தொடர் விவாதங்களை நடத்தி வருகிறார் அவர். 

இந்த விவாதங்களில் , பல்வேறு கருத்துக்களை முன்வைத்து விவாதம் நடக்கும் நிலையில், ' கூட்டணியிலிருந்து திமுக நம்மை வெளியேற்றினால் திமுக கூட்டணியை பலகீனப்படுத்தும் அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் ' என மூத்த நிர்வாகிகள் பதிவு செய்துள்ளனர். 

திருமாவளவனும் இந்த கருத்துக்களில் உடன்பட்டவராகவே ஆமோதித்திருக்கிறார். இந்த நிலையில் தான், நேற்று  ரவிக்குமாருடன் டெல்லி சென்ற திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையகம் சென்று சீத்தாராம் எச்சூரியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். 

திமுக போட்டிருக்கும் பல அரசியல் கணக்குகளைப் பற்றி எச்சூரியிடம் விளக்கியிருக்கிறார் திருமாவளவன். இது ஒரு புறமிருக்க , இந்த சந்திப்பு நடப்பத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திருமாவளவனை  சந்திக்க வேண்டும் என விரும்பி அவருக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். 

அதனை ஏற்று, ராகுலின் வீட்டுக்குச் சென்ற திருமாவளவன், ரவிக்குமாரிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து நிறைய விவாதித்திருக்கிறார் ராகுல்காந்தி. இந்த சந்திப்பு பற்றி காங்கிரஸ் மற்றும் சிறுத்தைகள் தரப்பில் விசாரித்தபோது, " தமிழக அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த ராகுல், திமுக கூட்டணியை பத்தியே அதிக கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற்றதுடன், அதில் சிறுத்தைகளின் கருத்துக்கள் என்னவென்பதையும் கேட்டறிந்தார். திமுக குஉட்டணியிலிருந்து காங்கிரஸே தன்னிச்சையாக முரண்பட்டு வெளியேற வேண்டும் என திட்டமிட்டே ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக தனக்கு கிடைத்த தகவலை திருமாவிடம் ராகுல் பகிர்ந்துகொண்டபோது, 

கூட்டணியிலிருந்து ஒரு கட்சியை விலக்க வேண்டுமாயின் அவர்களாகவே விலக்கமாட்டார்கள். சம்மந்தப்பட்ட கட்சியேவெளியேரும் சூழலை திமுக உருவாக்கும். இது, கலைஞரின் அரசியல் ஸ்ட்டேடஜி. அதே வியூகத்தைத்தான் ஸ்டாலினும் கையிலெடுக்கிறார் என சொல்லியிருக்கிறார் திருமா.

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!