வேட்டியை தூக்கி கட்டி வந்த அரசியவாதிகள் மாறினார்கள். வெள்ளம் மாறவில்லை..கைலாசா அதிபர் நித்தி பயங்கர நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 5:09 PM IST
Highlights

அப்படி என்றால் இன்னும்கூட சென்னையில் வெள்ளம் வந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ முதல்வர்கள் வந்து போனாலும் இந்த பிரச்சனை மட்டும் தீரவில்லை. இது நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும், இந்த வெள்ளத்திற்கான அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதையே அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. இதற்கு தீர்வு காணவில்லை என்றுதான் நான் சொல்வேன். 

ஒவ்வொரு முறையும் வெள்ள பாதிப்பை பார்வையிட  வேட்டியை தூக்கிக் கட்டி வந்த அரசியல்வாதிகள் மாறினார்களே தவிர வெள்ள பாதிப்பு குறையவில்லை என நித்யானந்தா கூறியுள்ளார். பல ஆண்டுகளாக மழை பெய்வது, அரசியல்வாதிகள் ஆய்வு செய்ய வருவது, நிவாரம் கொடுப்பது என்பது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது என்றும் ஆனால் அதற்கு தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.  கடந்த காலங்களில் நடந்த வெள்ள பாதிப்பின் போது குறித்து அவர் பேசிய வீடியோ, தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

வடகிழக்கு பருவமழை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை சென்னையில்  வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாட்கணக்கில் பெய்த மழையால் சென்னைவாசிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே தீவிரம் காட்டிய மழை பிறகு, வேலூர் கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டே, என பரவி, டெல்டா மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடியதுடன், பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி  மாவட்டங்களிலும் தீவிரம் காட்டியது. குறிப்பாக ஒட்டு மொத்த தமிழகமும் கொட்டித் தீர்த்த பேய் மழையில் தத்தளித்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மழையின்  தீவிரம் மிக கொடூரமாக இருந்தது என்றால் மிகையல்ல. 

தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் பல்வேறு  பகுதிகளில் வெள்ளக் காடாக மாறியது. முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின, சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சென்னை மக்களை சொல்லொணா துயரத்திற்கு ஆட்படுத்தியது, கடந்த மாதம் மட்டும் 1000 மில்லி மீட்டர் மழை பதிவானதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் பதிவானது, இது நான்காவது முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொஞ்சம் மழைக்கே தள்ளாடும் சென்னை, அடாது மழை விடாது பெய்ததால் தனி தீவாகமாறி தத்தளித்தது.   நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டிதே இதற்கு காரணம் என்றும், போதுமான மழைநீர் வடிகால் திட்டம் இல்லாததும் வெள்ளப்பெருக்கு மற்றொரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல சென்னைக்கு பெரு வெள்ளம் என்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை வெள்ளத்தைப் பற்றி சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தை கூறி ஆட்சியாளர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் நிலையில், அதற்கு தூபம் போடும் வகையில் நித்யானந்தாவின் பேச்சும் அமைந்துள்ளது. இதனால் இந்த வீடியோ இப்போது பலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கும் அளவிற்கு வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் நித்யானந்தா அவர்கள் முன்னாள். இந்நாள் முதல்வர்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக அவருக்கே உரிய நக்கல் பாணியில் அவர் பேசியுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அவர் பேசிய இந்த வீடியோ இப்போதும் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-  தண்ணியின் வீட்டில் நாம் வீடு கட்டியதால் நம் வீட்டில் இப்போது தண்ணீ  வீடு கட்டுது... மழை வெள்ளம் தொடர்பாக  ஃபேஸ்புக்கில் ஒரு மீம்ஸ் பார்த்தேன், அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெள்ளத்தையும் பார்வையிடுகின்றனர். பிறகு வந்த முதல் அமைச்சரும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெள்ளத்தை பார்வையிடுகிறார். இப்படி வேறு வேறு முதலமைச்சர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சென்னை வெள்ளத்தை பார்வையிடுவது போல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. 

அப்படி என்றால் இன்னும்கூட சென்னையில் வெள்ளம் வந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ முதல்வர்கள் வந்து போனாலும் இந்த பிரச்சனை மட்டும் தீரவில்லை. இது நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும், இந்த வெள்ளத்திற்கான அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதையே அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. இதற்கு தீர்வு காணவில்லை என்றுதான் நான் சொல்வேன். அடிப்படையாக நமது பிரச்சினை என்னவென்றால் தண்ணியோட வீட்டுல நாம வீடு கட்டினதால நம்ம வீட்டுல தண்ணி வீடு கட்டுது. அவ்வளவு தான் பிரச்சனை. அதேபோல் வெள்ளம் வந்தவுடன் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து பார்க்கிறார்கள். அவ்வளவுதான் அத்துடன் அந்த பிரச்சினை முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறோம். அதில் நமது கவனம் அனைத்தும் திசை திரும்பி விடுகிறது. இத்தனை முதல்வர்கள் வந்தும் இத்தனை முதல்வர்கள் ஆய்வு செய்தும் இன்னும் ஏன் வெள்ள பாதிப்பு தீரவில்லை. அப்படி என்றால் அடிப்படையில் இந்த பிரச்சினையை எவரும் புரிந்து கொள்ளவே இல்லை, அப்படி என்றால் இந்த பிரச்சனை மாற்ற முடியாத நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். பிரச்சனை முற்றி விட்டது என்று அர்த்தம். இதற்குப் பிறகும் நீர்நிலைகளில்  கட்டிடம் கட்டி குடியேறியவர்களை காலி செய்ய முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது என்று அர்த்தம்.

நிறைய பேர் அப்படி வாழ ஆரம்பித்து விட்டனர், சட்டத்தாலும் வேறு எவராலும் இவர்களை காலி செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. அப்படி என்றால் மழை அடிக்கிற மாதிரி அடிக்கும், நாம் அழுவது போல  அழனும்.. நிவாரண உதவி நடக்கிற மாதிரி நடக்கும்... மீண்டும் அடுத்த மழை வருகிறபோது மழை அடிக்கிற மாதிரி அடிக்கும்.. இப்படியே மாறி மாறி நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். எனவே இந்த பிரச்சனையில் இதுதான் தீர்வு என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் நிஜத்தோடு, இயற்கையோடு நம்முடைய தொடர்பை நாம் இழந்து விட்டோம் என்பது தான் இதுபோன்ற வெள்ள பாதிப்புகளுக்கு காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!