சட்டப்பேரவை நிகழ்வுகளை.. இனி லைவாக காணலாம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி !

Published : Jan 05, 2022, 12:05 PM IST
சட்டப்பேரவை நிகழ்வுகளை.. இனி லைவாக காணலாம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி !

சுருக்கம்

தமிழக அரசின்  சட்ட பேரவை நிகழ்வுகளை இனி  நேரலையாக யூடியூப் பக்கத்தில் காணலாம். 

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் ‘லைவ்’ ஒளிபரப்பு என்பது நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் கோரிக்கை. மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சிகள் அல்லது யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரி 2012-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை அப்போதைய அதிமுக அரசு நிலுவையில் போட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், ‘ஆட்சிக்கு வந்தால் பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்’ என்றுதேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்தது. ஆனாலும், முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது.  எப்பொழுதும் இசைத்தட்டு மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படும் நிலையில், இந்த முறை நேரடியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரி பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரை படித்தார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த சட்ட பேரவை நிகழ்வுகள் அனைத்தும் TN DIPR மற்றும் TacTv channel 1  ஆகிய யூடியூப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக மக்களும் இனி நேரடியாக சட்டப்பேரவை நிகழ்வுகளை காணலாம் என்ற வகையில் இந்த திட்டம் பெரும்  வரவேற்பை பெற்றிருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!