திமுக மாவட்ட செயலாளர்களுக்கு நீங்கியது சிக்கல்... மனுவை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்..!

Published : Jul 20, 2021, 02:33 PM IST
திமுக மாவட்ட செயலாளர்களுக்கு நீங்கியது சிக்கல்... மனுவை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்..!

சுருக்கம்

அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும் 

அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘’அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை’’தலைமை நீதிபதி அமர்வு, கோவை மாவட்டம் உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு முடித்து வைத்தது. 
 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு