எடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!

By vinoth kumarFirst Published Jan 27, 2021, 7:18 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை, அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை, அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த்;- சசிகலா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு பெண்ணாக அவருக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா. எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுகவினரால் முதல்வராக தேர்வானவர். 

மேலும், 100 நாள்களில் மக்களின் பிரச்சனை தீரும் என்று கூறும் ஸ்டாலின். அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார் என காட்டமாக கேள்வி எழுப்பினார். எனவே வாக்குறுதி யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். அதை நிறைவேற்றுவது முக்கியம் என்று தெரிவித்தார். 

கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு எவ்வளவு உள்ளது என்பது இந்த தேர்தலில் தெரியவரும். அதிமுக கூட்டணியில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளை இந்த தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர், மக்களால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவில்லை என்று பேசியதும், சசிகலாவை ஆதரித்து பேசியதும் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!