நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70% தயாரிப்பது பெருங்கடல்கள்தான்..! காடுகள் அல்ல. சுற்றுச் சூழல் அமைப்பு அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2020, 11:29 AM IST
Highlights

எந்த அதானியும், அம்பானியும் அங்கே தொழிற்சாலை வைத்து ஆக்சிஜனை தயாரிக்கவில்லை, கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்களும் தாங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன, அதனால் நமக்கு ஆக்சிஜனை கிடைக்கிறது.

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை எது அதிகமாக தயாரிக்கிறது என்று ட்விட்டரில் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது, அதற்கு 51% மேல் காடுகள் தான் என மக்கள் தேர்வு செய்திருந்தனர். உண்மை என்னவெனில், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70% தயாரிப்பது பெருங்கடல்கள்தான். என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், 25% த்தை அமேசான், போர்னியா போன்ற வெப்பமண்டல காடுகளும், மீதமிருக்கும் 5%தான் நாம் வளர்கின்ற மரங்களும் செடிகளும் கொடுக்கின்றன. பெருங்கடல்கள் தயாரிக்கின்றன என்றால் எப்படி? எந்த அதானியும், அம்பானியும் அங்கே தொழிற்சாலை வைத்து ஆக்சிஜனை தயாரிக்கவில்லை, கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்களும் தாங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன, அதனால் நமக்கு ஆக்சிஜனை கிடைக்கிறது. 

நம்முடைய கட்டைவிரலின் மேற்பகுதியில் உள்ள அளவில் மட்டும் சுமார் 10 லட்சம் உயிரினம் இருக்கும் அளவிற்கு சிறியதொரு உயிரினம், "ப்ரொக்ளோரோகாக்கஸ்" (prochlorococcus).அந்த சிறிய உயிரினம்தான் நாம் சுவாசிக்கக்கூடிய ஐந்தில் மூச்சில் ஒரு மூச்சுக்கான ஆக்சிஜனை தயாரிக்கிறது, அப்படியெனில் கடலின் மகத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் கடல் ஒன்றும் நம்முடைய குப்பைதொட்டியல்ல, நினைத்த குப்பையெல்லாம் கொண்டுகொட்டுவதற்கு என்று சொல்லிவருகிறோம். காலநிலை மாற்றம் கடல்களின் வெப்பத்தை அதிகரிக்க அதில் உள்ள பவளப்பாறைகள் அழிந்துவருகின்றன, அவைதான் சிறிய உயிர்களின் வாழ்விடம். 

 

கடலில் அணுக்கழிவுகளை, அனல் மின் நிலைய கழிவுகள், ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வரக்கூடிய கழிவுகள், நகர கழிவுகள், உரம் சார்ந்த விவசாய கொடுக்கக்கூடிய பிரச்சனைகள், ரசாயன பூச்சு மற்றும் "பிஒபி"யில் (POP)செய்யப்படும் சாமி சிலைகள், நெகிழி என நாம் கொட்டும் குப்பை, நாம் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. இந்த கழிவுகள் அனைத்தும் கடலில் வாழக்கூடிய சிறிய உயிரினங்களை பாதிக்கின்றன, அது நமக்கான  ஆக்சிஜன் தயாரிப்பை பாதிக்கிறது. அதனால்தான் சொல்கிறோம், இப்போது மட்டுமல்ல எப்போதும் கடலில் கொண்டு எதை கரைப்பதையும் தடுக்கவேண்டும், தவிர்க்கவேண்டும் என்று என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  
 

click me!