கீழடியில் கிடைத்த அடுத்த பொக்கிஷம் எலும்பு கூடு..! தீவிரப்பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள்.!!

By T BalamurukanFirst Published Jul 8, 2020, 8:38 AM IST
Highlights

கீழடியில் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்கள் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக ஒரு குழந்தையின் எலும்பு கூடு அடுத்தடுத்து கிடைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 


கீழடியில் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்கள் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக ஒரு குழந்தையின் எலும்பு கூடு அடுத்தடுத்து கிடைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Latest Videos

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது கீழடி நிகழ்ச்சியில் நேரடியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் தொல்லியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கின. ஆனால், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.

 மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும், அகரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன. இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கதிரேசன் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் பழைமையான ஈமக்காட்டில் முதுமக்கள் தாழியில் எலும்புகள் கிடைத்து வந்தன. 3விதமான எடைகற்களும் பச்சை நிற நீள பாசிகளும் கிடைத்தது.

ஏற்கெனவே ஜூன் 18-ம் தேதி 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக்கூடு கிடைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் தற்போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று 95 செ.மீ அளவில் கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூட்டை மரபணு ஆய்வு செய்த பிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும். 

click me!