அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியின் கொள்கைகளை காப்பியடித்த மய்யம்.. கமலை அசிங்கப்படுத்தும் ரவிக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2020, 12:05 PM IST
Highlights

ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.

மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனவும் அதை அப்படி மக்கள் நீதி மய்யம் வரிக்கு வரி காப்பி ஆடித்துள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விமர்சித்துள்ளார். கட்சி கொள்கைகளை வெளியில் சொன்னால் மற்றவர்கள் அதை காப்பியடித்து விடுவார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ள   நிலையில் ரவிக்குமார் இவ்வாறு விமர்சித்துள்ளார்.  

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில்  நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,  அப்போது மைக் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என போலீசார் அறிவுறுத்தியதால், தனது வாகனத்தில் இருந்தவாரே கூட்டத்தை நோக்கி கையசைத்து மௌன பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தனது கட்சி கொள்கைகள் வெளியே தெரிந்தால் மற்றவர்கள் அதை காப்பியடித்து விடுவார்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை என கூறினார். அவரின் இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அரசியல் கட்சி தொடங்கி, கொள்கையைக் மக்கள் மத்தியில் கூறி அதன் அடிப்படையில் வாக்கு சேகரிக்க வேண்டிய ஒரு அரசியல் கட்சித் தலைவர், இப்படி கட்சி கொள்கை கூறினால் அதை மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள் என கூறியிருப்பது விமர்சனத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்து குறித்து பலரும் பலவிதமாக கருத்துக்கள் கூறிவருகின்றனர். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். 

ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி. The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். காப்பி அடிப்பதற்கு தனக்கு இருக்கும் உரிமையைத்தான் ‘காப்பிரைட்’என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

click me!