மனைவியை சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவன்.! மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ..! வைரலாகும் ஆபாசஆடியோ .!

Published : Oct 07, 2020, 09:26 PM ISTUpdated : Oct 07, 2020, 09:29 PM IST
மனைவியை  சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவன்.! மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ..! வைரலாகும் ஆபாசஆடியோ .!

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கவையில் மனைவியை சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவர்., கணவர் மீது திருட்டு பட்டம் கட்ட முயன்ற பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னியாகுமரி மாவட்டம் தக்கவையில் மனைவியை சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவர்., கணவர் மீது திருட்டு பட்டம் கட்ட முயன்ற பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம். தக்கலையை அடுத்த மணலி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மகள்., மகன் மற்றும் கூலி வேலை பார்க்கும் கணவருடன் வசித்து வருகிறார். இளம் பெண்ணின் கணவர்  அவரது மனைவியை விட 13-வயது மூத்தவர் என தெரிகிறத. அந்த 35-வயது மதிக்கதக்க இளம் பெண்அடிக்கடி கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு வெளியூர்களுக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த இளம்பெண் ஒரு வாரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் கணவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் விசாரித்து வந்த நிலையில் அந்த இளம்பெண் ஒரு வாலிபருடன் தக்கலை காவல் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது உதவி ஆய்வாளர் ரமேஷ்சிடம்... 'தான் தனது கணவரால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் எனது நகைகளையும் இருசக்கர வாகனத்தையும் வாங்கி வைத்து விட்டு பொய் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்த உதவி ஆய்வாளர் அந்த இளம்பெண்ணிடம் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக தெரிகிறது. பின்னர் அந்த இளம் பெண்ணிடம் உதவி ஆய்வாளர் ரமேஷ் அடிக்கடி தகாத உறவு வைத்ததாக தெரிகிறது. அந்த இளம் பெண் அந்த உறவை பயன்படுத்தி கணவர் மீது 16-சவரன் தங்க நகைகளை அபகரித்ததாகவும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து தருமாறு கேட்க..அதற்கு உதவி ஆய்வாளரும் உடன்பட்டு ஆசை வார்த்தை கூறி அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளரால் எந்த பயனும் இல்லாத நிலையில் அந்த இளம் பெண் உதவி ஆய்வாளர் உடன் உள்ள தொடர்பை துண்டித்த நிலையில் 26.09.2020.அன்று அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தன்னுடன் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் உள்ள விடுதியில் தனிமையில் இருக்க அழைத்துள்ளார்.

 ஆனால் அந்த இளம் பெண்ணோ தனிமையில் இருக்க வருவதாகவும் தான் சொன்னது போன்று கணவர் மீது வழக்கு பதிவு செய்து 16-சவரன் தங்க நகைகளையும் இருசக்கர வாகனத்தையும் மீட்டு தர வேண்டும் என்றும் 5-சவரன் தங்க நகைகளை உங்களுக்கே தந்து விடுகிறேன் என பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தக்கலை உட்கோட்ட டி.எஸ்.பி ராமசந்திரனிடம் விளக்கம் கேட்ட போது "அவரவர் செய்யும் தவறுக்கு அவரவர் அனுபதித்தே தீர வேண்டும்" என காட்டமாக பதில் அளித்தார்.இன்ஸ்பெக்டர் புரோமோசன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!