தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கோரிக்கை..!

Published : Jun 24, 2020, 09:14 AM IST
தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கோரிக்கை..!

சுருக்கம்

உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவை ரூ.1321 கோடி மற்றும் வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முதன் முதலில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட போது, மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக ரூ.3,000 கோடி, கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ரூ.9000 கோடி சிறப்பு நிதி, மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ரூ.4,000 கோடி என மொத்தம் 16,000 கோடி வழங்கும்படி மத்திய அரசை தமிழக அரசு கேட்டிருந்தது. இருந்தது. 
 உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவை ரூ.1321 கோடி மற்றும் வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், தமிழக அரசு கோரிய நிதி உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஏற்கனவே கேட்டிருந்த இருந்த ரூ.12,000 கோடி, உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவைத் தொகை ரூ.1,321 கோடி ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!