அதிமுக தலைவரிடம் ரூ 20 ஆயிரம் பெற்று இடைத்தேர்தலில் வென்ற திமுக... அத்தாட்சியான அதிர்ச்சிக் கடிதம்..!

By Thiraviaraj RMFirst Published May 8, 2019, 3:18 PM IST
Highlights

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முகையூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் செலவுக்காக இருபதாயிரம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முகையூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் செலவுக்காக இருபதாயிரம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

திமுகவின் மூத்தத் தலைவர் எ.கோவிந்தசாமி மறைவிற்குப் பின் 1969-ல் முகையூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 50 ஆண்டுகள் கடந்த நிலையில், அப்போது திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கு, திமுக தலைவராக இருந்த கருணாநிதி எழுதிய கடித்தில், ‘’திரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள். அன்புள்ள கழகப் பொருளாளர் அவர்களுக்கு, வணக்கம். முகையூர் தேர்தல் செலவுகளுக்காக இதுவரையில் என் வகையில் ஆறாயிரம் ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறேன்.

 

மேலும் ரூபாய் தேவைப்படுகிறது. தலைமை கழகத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்யலாமென எண்ணுகிறேன். பொதுச் செயலாளர் மாண்புமிகு நாவலர் அவர்களின் ஒப்புதலுடன் தாங்கள் இருபதாயிரம் ரூபாய்க்கான ’செக்’ ஒன்றை திரு.சண்முகமிடம் தந்திட வேண்டுகிறேன். 

தலைமை கழகத்திலிருந்து சண்முகம் அல்லது தேவராஜ் இருவரில் ஒருவர் முகையூரில் தங்கி செலவுகளை கவனிக்க இருக்கிறார்கள். அன்புடன் கருணாநிதி’’ என அந்தக் கடிதம் முடிகிறது. அந்தக் கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1969ல் முகையூரில் நடந்த அந்த இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ., எ.கோவிந்தசாமியின் மனைவி எ.ஜி.பத்மாவதி வெற்றிபெற்றார்.

click me!