என்னுடைய பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்... ஒரே பந்தில் சிக்சர் அடித்த ஆர்.பி.உதயகுமார்..!

By vinoth kumarFirst Published Aug 23, 2020, 5:09 PM IST
Highlights

முதல்வரும் துணை முதல்வரும் என்னை அழைத்து பதவி முக்கியமா? தென் தமிழக வளர்ச்சி முக்கியமா? என கேள்வியெழுப்பினால் எனக்கு தென் தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியமென கூறுவேன். 


பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடியாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். அமைச்சர் செல்லூர்  ராஜூ உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது கருத்தை தெரிவித்தார். இதனால், அமைச்சர்கள் இடையே மாறுப்பட்ட கருத்து தெரிவிப்பதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் இன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதல்வரும் துணை முதல்வரும் என்னை அழைத்து பதவி முக்கியமா? தென் தமிழக வளர்ச்சி முக்கியமா? என கேள்வியெழுப்பினால் எனக்கு தென் தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியமென கூறுவேன். 

அதை முன்னிறுத்தி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இரு மொழி கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் தடை இல்லாமல் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படுகிறது என்றார்.

click me!