குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நடிகையை நாசம் செய்த கல்லூரி தாளாளர்.. 7 ஆண்டுகள் கதற கதற கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2021, 5:42 PM IST
Highlights

அதேபோல், கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள், இல்லையென்றால் பணத்தை வாங்கி ஏமாற்றுவதாக உன் மீது பொய் புகார் கொடுப்போம் என சமீராவை ஜெயக்குமார் மிரட்டியுள்ளார்.  

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாக கல்லூரி தாளாளர் மீது சினிமா நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரி தாளாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னை சூரப்பட்டு சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சமீரா(22) தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இவர், எதிராளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இந்நிலையில் தனியார்  பொறியியல் கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் என்பவர் சமீராவை  தான் தயாரிக்க உள்ள படத்தில் நடிப்பதற்காக பேச அழைத்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த சமீரா Rehearsal Shoot-ல் நடிப்பதற்காக தாளாளர் கோவிந்தராஜ் வரச் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். 

அப்பொழுது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நடிகை சமீராவிடம் கோவிந்தராஜ் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதை வீடியோ  எடுத்து வைத்த கொண்ட தாளாளர் கோவிந்த ராஜ் அதைகாட்டி அடிக்கடி தன்னுடன் உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இல்லை என்றால் அதை இணையத்தில் பரப்பி விடுவதாகவும் கோவிந்தராஜ் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சமீரா புகார் அளித்துள்ளார், தற்போது அந்த  வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் சமீராவை தொடர்புகொண்டு கோவிந்தராஜ் மீது கொடுத்துள்ள புகாரை திரும்பப் பெற வேண்டுமென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. 

 

அதேபோல், கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள், இல்லையென்றால் பணத்தை வாங்கி ஏமாற்றுவதாக உன் மீது பொய் புகார் கொடுப்போம் என சமீராவை ஜெயக்குமார் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சமீரா 2019 செப்டம்பர் மாதம் ஜெயக்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார், அப்போது போலீஸ் விசாரணையில் தான் எந்தவிதமான பணமும் பெற்றுக் கொள்ளவில்லை என சமீரா விளக்கமளித்துள்ளார், இது சிவில் வழக்கு என்பதால், நீதிமன்றத்தை அணுகி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி மாலை 3 மணி அளவில், சமீராவின் வீட்டுக்கு சென்ற ஜெயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சமிராவை தகாத வார்த்தைகளால்  திட்டி அவமரியாதை செய்ததுடன்,  அவரின் கழுத்தை நெரித்து கோவிந்தராஜ் சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

ஜெயக்குமார்  உடன் இருந்த பூர்ணிமா என்ற பெண் சமீராவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து சமீரா போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் வந்து சமீராவை மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சமீரா கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகைக்கு மயக்கமருந்து கொடுத்து கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரி தாளாளர் அவரை பாலியல் சித்திரவதை செய்து வந்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!