4வது அலை வரப்போகுது.. செவிலியர்கள், மருத்துவர்களை பணி நீக்கம் செய்வதா? அரசை எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்.

Published : Mar 22, 2022, 06:20 PM IST
4வது அலை வரப்போகுது.. செவிலியர்கள், மருத்துவர்களை பணி நீக்கம் செய்வதா? அரசை எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்.

சுருக்கம்

எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக கொரானா பணி ஆற்றிவரும் அத்தகைய மருத்துவர்களுக்கு, உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொண்டு பணி நிரத்தரம் வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்."அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வேன்.

கொரானா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்களுக்கு பணிநீட்டிப்பு  வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திர நாத் கூறியதாவது செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது : - 

தமிழ்நாடு அரசு, சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை் உருவாக்குவது வரவேற்புக்குரியது. பாராட்டு க்குரியது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் தென் கொரியா, ஹாங்காங், சீனா போன்ற நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா நான்காவது  அலை ஏற்படலாம் என்று கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் ஆய்வு கூறுகிறது. 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். அனைவரும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய சூழலில்  கொரோனா நான்காவது  அலை ஏற்பட்டாலும் , அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தனது மருத்துவ மனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும். தமிழகத்தில் இன்னும் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.2 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறார்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கும் பணி இருக்கிறது.

நான்காவது அலை ஏற்படுகிறதா? எனக் கண்காணிக்க கொரோனா பரிசோதனைகளும் தினந்தோறும் செய்ய வேண்டியுள்ளது. கொரோனா தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசிக் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டியுள்ளது. கொரானா தடுப்பு, கொரோனா சிகிச்சை, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் நல்ல அனுபவம் பெற்ற இம் மருத்துவப் பணியாளர்களின் சேவை இந்த நேரத்தில் அவசியப்படுகிறது. இச்சூழலில் தமிழக அரசு மருத்துவ மனைகளில் பணி புரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை, மருத்துவர்களை, செவிலியர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல. அது மக்கள் நலனுக்கு  எதிரானது. கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மினிகிளினிக் பல் நோக்கு மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் இதர பணியாளர்களையும், கோவிட் பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும், முதுநிலை மருத்துப்படிப்பை முடித்த மருத்துவர்களையும்  இம்மாத இறுதியில் பணி நீக்கம் செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருவது  அதிர்ச்சி அளிக்கிறது.

அத்தகைய முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். கொரோனா பரவல் உச்சத்தில்  இருந்த காலக் கட்டத்தில், கொரோனா பணியில் சேர பலரும் தயங்கிய நேரத்தில், இந்த மருத்துவப் பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தான் தங்கள் உயிரையும் துச்சமென கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவப் பணியில் சேர்ந்தனர். இதை மனதில் கொண்டு,அவர்களது சேவையை மதித்து ,அவர்களுக்கு பணி நீட்டிப்பும்,  பணிப்பாதுகாப்பும் மனித்தநேய அடிப்படையில் வழங்கிட வேண்டும். அதே போல், ஏற்கனவே எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 120 மருத்துவர்கள்  ஒப்பந்த  அடிப்படையில் ,கொரோனா முதல் அலை பரவிய காலம் தொட்டே, பல மாதங்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு மருத்துவ மனைகளில் தற்காலிகமாக கொரானா பணி ஆற்றிவரும் அத்தகைய மருத்துவர்களுக்கு, உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொண்டு பணி நிரத்தரம் வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்."அடுத்த ஐந்தாண்டு களுக்குள் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வேன். அனைவருக்கும் அவரவர் படிப்புக்கேற்ற, தகுதிக் கேற்ற வேலை என்பது அரசின் லட்சியம் "என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ள நிலையில், தி.மு.க தேர்தல் அறிக்கையில், "ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும்" என உறுதி மொழி அளித்துள்ள நிலையில், மருத்துவத் துறை பணியாளர்கள் பணி நீக்கம் என்பது சரியான நடவடிக்கையாக அமையாது,என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?